பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


இல்லாமல் நான் எப்படி இனி இந்த உயிரைச் சுமப்பேன். நீ இன்றி நான் இந்த மண்ணிலே எப்படி உயிர் தரிப்பேன்?... விதியாம், விதி!- சுமதியை-தன் மாஜி காதலி சுமதியை நேருக்குநேர் பார்க்கக்கூடிய உறவு அல்லது உரிமை இனிமேல் தனக்குக் கிடையாது என்று முடிவிட்டவன் மாதிரி, கண்களே இறக்கிக்கொண்டு, சுமதி, நான் புறப்படு கிறேன்,' என்று சொன்னன். பிறகு சுந்தரிடமும் கூறிஞன் குமார்.

நெருப்பின்மீது நின்றுகொண்டிருந்தாள் சுமதி.

சுந்தர் திடுக்கிட்டான். 'குமார், வந்தகாலோடு புறப்படுறீங்களா? நல்லாச் சொன்னிங்க, போங்க, ஊஹாசம், போகக்கூடாது; நான் ஒப்பமாட்டேன்; அனுமதிக்கவும் முடியாது. ஏன்னு, நீங்க என்ைேட-எங்களோட குடும்ப நண்பர்; பண்புள்ள நல்ல சினேகிதர். சுமதி உங்களை என்கிட்டே அறிமுகப்படுத்தின அன்னிக்கு உங்களைப்பற்றி என் மனசிலே உருவான உயர்ந்த அபிப்பிராயம் பசுமரத்து ஆணியாய் என் நெஞ்சிலே எப்பவும் பதிஞ்சிருக்கும். அன்பு ஒருநாளும் கேட்பதில்லேன்னு மகாத்மா சொன்னது ஞாபகத்திலே ஒடுது குமார், நீங்க ரெண்டொரு நாளாச்சும் எங்க வீட்டு விருந்தாளியாகத் தங்கிட்டுப் போனுல்தான் எனக்கு-எங்களுக்கு ஆறுதலாக இருக்குங்க, அதே ஆறுதல் உங்களுக்கும் வேண்டாங்களா?” என்று கெஞ்சும் குரலெடுத்துப் பேசிமுடித்தான் அவன்.

சுமதி மூச்சுக்காட்டவில்லை; மூச்சுத்தான் நின்றுவிடும். போலிருக்கிறதே?

எழுந்த குமார் உட்கார்ந்தான்; ஏமாற்றம் ஏக்கமாக மாற, சுமதியைப் பார்வையிட்டான். அவன் எதிர்பார்த் ததுபோல, சுமதியும் தன்சார்பிலே அவனை விருந்தினகை இருந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளவில்லை. ஏக்கம். இப்போது ஆத்திரமாக உருக்கொண்டதுபோலும் தீவிரச் சிந்தனையில் சிலபல நிமிஷங்களைச் சேதப்படுத்திய பிறகு

சீ.-7