பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


நினைவுகள் ஆட்கொண்டன; இப்போது குமாரிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது? ஏற்கனவே,சிந்தித்துவைத்திருந்த பேச்சை அவள் நினைவுகூர்ந்தாள்.குமார் புன்சிரிப்புத் தவழ, பதில் வணக்கம் கூறிக் கும்பிட்டதையும் எண்ணமிட்டாள்.

'குமாரைப் பார்த்தால், நடப்பு ஒண்ணுமே தெரியாதுபோலத் தோணுது,ம், பார்க்கலாம்!-"இதோ.வந்திடுறேன்,”என்று சொல்லி உட்புறம் விரைந்தாள் சுமதி,

"உங்க தந்தி கிடைச்சது;ஆளு,நான் ஒரு அவசர காரியமாக பள்ளி அக்கிரகாரத்திலே தங்க நேர்ந்திடுச்சு."குமார் தொடர்ந்து பேச நினைத்தபோது,சுமதி ஏந்திய காப்பியை ஏந்திக் கொண்டான்.சுமதியை விழுங்கப் போகிறனா குமார்?

டபரா தம்ளரை வாங்கித் தரையில் வைத்தாள் சுமதி."அத்தான்,அடுத்த வாரம் நாம் பீச்சுக்குக் கிளம்புவோம்,"என்றாள்.குமாரை நோக்கி,"வேறு விசேஷம் ஏதேனும் உண்டுங்களா?"என்று கேட்டாள்.

"விசேஷத்தை நீதான் சுமதி சொல்லனும்!” என்றான் குமார்.

சுமதிக்குச் 'சுருக்'கென்றது.அப்படியென்றால், குமாருக்குத் தன் முடிவைப் பற்றிய சேதி ஒன்றும் தெரியாதென்றும் திடப்படுத்திக் கொண்டாள். பிறகு, ஒருமுறை அத்தானைக் கூர்ந்த மதி பதித்து நோக்கினாள்.மறுபடி குமார் பக்கம் கண்களைத் திசை திருப்பினுள்.

அப்போது,வேறு யாரோ ஒர் இளைஞன் வந்து சேர்ந்தான்."சுந்தர்,இப்போது எப்படி இருக்கே?"என்று கேட்டான்.

சுமதி ஒதுங்கினாள்!

"ஊம்...இருக்கேன்,பிரபு!”