பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


சுமதியின்பின் அழகை ரசித்த வண்ணம் இருந்த சுந்தர், *வணக்கம்!” என்ற குரல் கேட்டுத் திரும்பினன். ஆச்சர்யமும் திகைப்பும் ஏற்பட்டன; குழப்பமும் கூடத்தான்!

அங்கே, அப்போது கம்பீர ஆகிருதியுடன் குமார் நின்று கொண்டிருந்தான், கையில் சிவப்புநிறக் கைப்பெட்டியுடன் ! விதிக்கு நிறம் என்ன?--சிவப்போ?

“வணக்கம், வணக்கம்; உட்காருங்க, குமார்!’ உபசாரம் செய்தான் சுந்தர். பின்புறம் திரும்பிப் பார்த்தான்; சுமதி இன்னமும் குழந்தையுடன் அல்லாடிக் கொண்டிருந்தாள். குமாரிடம் எப்படி விஷயத்தைத் தெரியப்படுத்துவதென் பதையும் நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியவன் ஆளுன்.

குமார் பிரம்பு நாற்கலியில் அமர்ந்தான்; அவன் திருஷ்டி பரபரத்தது; முகம் சோர்வுற்றிருந்து. பிரயாண அசதிதான் காரணமாக இருக்கலாம். குழந்தை நல்லா இருக்குங்களா? அன்றைக்குச் சாவுக்கு வந்திருந்தேன்; அப்போதிருந்த நிலவரத்திலே, உங்களோட பேசுறதுக்கும்கூட எனக்குப் பயமாயிருந்திச்சுதுங்க’, என்ருன் குமார். அவன் கண்கள் இரண்டும் சுமதியைத் தேடினவோ?

துக்கம் விசாரிப்பதில் பயம் என்ன வேண்டிக்கிடக்கிறது, பயம்?...'குழந்தை நல்லபடியா இருக்குங்க, குமார்!’

சுமதி என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான் குமார்.

சொல்லிவைத்தமாதிரி, அப்போது குழந்தையும் தானுமாக அங்கே வந்தாள் சுமதி. குமாரைக் கண்டதும், தீயை மிதித்தாற்போன்று தவித்துத் தடுமாறினுள். சமாளித்துக்கொண்டு, வாங்க, மிஸ்டர் குமார்', என்று முகமன் மொழிந்தாள். நேரம் கெட்ட நேரத்தில், எதிர்பாராத சமயத்தில் குமாரைச் சந்தித்ததில் உண்டான சலனத்தைச் சமர்த்தாய்ச் சமாளித்தாள். பழைய குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது மனம். கடந்த கால