பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95


நூதனமான சுகமும் இதயத்தின் இதயத்தில் ஊடாடிக் கொண்டிருந்த விசித்திரத்தையும் அவன் எண்ணி வியக்கத் தவறிவிடவில்லை. நேர்ந்துவிட்ட இழப்பை ஈடுகட்டிச் சரிக்கட்டவே, காலம் இவ்வாறு அருமருந்தாக அமைந்திருக் கிறதோ?

சுமதியின் மைஇட்ட நேத்திரங்கள் நாணத்தால் இாழ்ந்தன. புதிய நம்பிக்கை மேலும் வலுவடைந்தது. தாமரைப் பூக்கள் கண் சிமிட்டிய வாயல் சேலையின் முகதலைவுப் பகுதியை இழுத்துவிட்டுக் கொண்டாள். “அத்தான், மெரினவுக்குக் குழந்தையையும் எடுத்திட்டுப் போவோம்; டாக்ஸியிலே போயிட்டு டாக்ஸியிலேயே திரும்பப்போருேம். அம்மா வீட்டைப் பார்த்துக்கட்டும்; இல்லே, காளிகாம்பிகை கோயிலுக்குப் போயிட்டுத் திரும்பட்டும்”, என்று ஆலோசனை சொன்னுள். இடது கன்னத்தில் அரும்பியிருந்த முகப்பருக்களில் அவளது தளிர்விரல் படர்ந்தது.

"அப்படியே செஞ்சிட்டால் போகுது; நீ ஒரு முடிவுக்கு வந்தால், அது சரியாகத்தான் இருக்கும். இருட்டுக்குள் திரும்பிடவேணும். காலம்பற பேதிக்குக் கொடுத்ததாகச் சொன்னயே? அதேைல ஒண்னும் பாதகமில்லையே? போற இடத்திலே உனக்குச் சிரமம் அதிகமாகாதே?' என்று விசாரித்தான் சுந்தர்.

'அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுங்க, அத்தான்! எல்லாத்தையும் எனக்குச் சமாளிக்கத் தெரியும்; குழந்தை யினலே ஏற்படுகிற சிரமம் ஒவ்வொண்ணும்தான் என்னேட நிம்மதியைப் பலப்படுத்த முடியும். சரி, புறப்படுங்க; பாப்பாவை எடுக்கிக்கினு ஒடியாரேன்”, என்ருள் சுமதி.

'ஒடியார வேண்டாம்: மெதுவா நடந்துவா, போதும்!”

வெட்கம் மணம் கூட்டிற்று.