பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டு

டோர்லிங் சுமதி!...?

பொன் அந்தி மாலைப் பொழுது.

சற்றே தெளிவான முகத்தோடு விளங்கினன் சுந்தர். தேவி கருமாரி அம்மன் விபூதியும் குங்குமமும் பளிச்சென்று தெரிந்தன; டெரிகாட் சட்டையின் பொத்தான்களைப் போட்டுக் கொண்டான்; ஸ்டுவில் கிடந்த சினிமா இதழைப் புரட்ட ஆரம்பித்தான்; சுகமாக வீசின. பூந்தென்றல் சுகமாகவே இருந்தது.

"அத்தான், நீங்க ரெடியா?”

சுமதி சிங்காரப் பதுமையாக வந்து நின்ருள். பரந்த நெற்றியில் எடுப்பாகத் தெரிந்த திலகமும் கொண்டையில் அலங்கரித்திருந்த கனகாம்பரச் சரமும் அழகுக்கு அழகு சேர்த்தன.

சுமதியைப் புத்தம் புதிய பார்வையால் அளந்தவன் இமைப்பொழுது நெஞ்சம் பறிபோய் நின்றன். உள்ளத்தின் கிளர்ச்சி கண்களில் சிதறியது. சுயப் பிரக்கினை அமைந்ததும், "ஒ, நான் ரெடிதான், சுமதி,” என்று கூறினன். சொற்கள் பிரேமபாசத்துடன் வெளிப்பட்டன. இதுவரை உணர்ந் திராத புதிய அமைதியும், இதுவரை அனுபவித்திராத