பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


சுசீலா, 'தங்கச்சி,” என்று கூடப்பிட்டாள்; அள்ளக் குறையாத பாசம், விள்ளக் குறையாத அன்பு. அவளும் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். கை நடுக்கம், போகப் போகச் சரியாகிப் போய்விடும். கோடியில் கிடந்த தாயில்லாப் பிள்ளை மறுபடி அழுத குரல் அவளை என்னவோ செய்தது. என்னென்னவோ நினைவுகள் ஓடின, ஆளுல், பயம் மாத்திரம் ஒடவில்லை. அந்தக் குழந்தையின் அருகில் ஏழைத் தொழிலாளி ஒருவன் வந்து நின்றதையும் சுசீலா கவனித்தாள். அவன், பிள்ளையின் அப்பாவாகவே இருக்க வேண்டும். பிறந்த குழந்தைக்குத் தாய்தான் முக்கியம்; பாவம் விதி யாரை விட்டது?

சுமதி தொட்டிலை ஆட்டிவிட்டுக் கொண்டிருக்கிருள். திருக்கோகர்ணம் ஜாதி முல்லைப் பூ தலையில் அம்பாரமாகக் குவிந்து கிடக்கிறது. சிவப்புக்கல் மூக்குத்தி மாநிற மேனிக்கு எடுப்புத்தான். சோளியில் பூத்திருந்த வெண்ணிற முல்லை மலர்களுக்கும், செருகு கொண்டை'யில் செருகப்பட் டிருந்த முல்லைச் சர்த்துக்கும் வெகு எடுப்பு

இப்பொழுது பாலும் ரொட்டியும் வேண்டும் சுசீலா வுக்கு. அத்தான் காலைப் பலகாரம் சாப்பிட்டாகளோ, என்னவோ? எங்கே சாப்பிட்டிருக்கப் போருங்க? ராத்திரி மூச்சூடும் ரயிலிலே அவதிப்பட்டிருப்பாங்க. பட்டணத்திலே நான் இல்லாமல், அத்தான் உடம்பு என்னமாய் மெலிஞ்சிட்டுது!...பட்டணத்துக்குத் திரும்பினடியும், அவரோட உடம்பைத் தேற்றியாகணும். என்கூடவே, சதா இருந்து பழகிட்டவங்க!-நான் இல்லாமல் பாவம், தவியாய்த் தவிச்சு உருகிப் போயிருப்பாங்க! நல்ல. அத்தான்!-ஆறுதல் தரும் பெருமை மீண்டும் ஏற்படவே செய்தது. கணவனைத் தேடினுள்; சுந்தர் குழந்தையின் மூத்திரத்துணியை மாற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஒரேயடியாகச் சிந்தனை வசப்பட்டு நிற்கிருளே சுமதி?குமாரை நினைத்துக்கொண்டிருப்பாளோ?-'சுமதி!'

  • சுமதிக்கு என்ன அக்கா வச்சிருக்கே?' என்று செல்லமாகக் குழைந்துகொண்டே வந்து நின்ற சுமதியின்