பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


அழகான கண்களிலே அப்பொழுதுதான் அத்தானின் அன்பான உருவம் தென்பட்டிருக்கவேண்டும். அத்தான், முன்னடியே நீங்க வந்திட்டீங்களா? நான் இப்பத்தான் பார்த்தேன்,' என்ருள். உதடுகளின் நளினம் எடுப்பான் முக்கின் முனையிலே அழகு பார்த்தது.

“நல்லவேளை, குழந்தை துரங்கிப் போயிடுச்சு இல்லாட்டி’ இப்பக்கூட உன் கண்ணிலே என் உருவம் பட்டிருக்காது! என்று சிரித்தான் சுந்தர், மைத்துனியோடு நைச்சியம்’ பேசுவதென்ருல், வெகு இஷ்டம்.

சுமதிக்கு வெட்கம் வந்துவிட்டது, வெட்கம்!

கைஜாடை காட்டி, கப்போர்டி"லிருந்த பாலேயும் ரொட்டித் துண்டையும் எடுக்கச் சொல்லிச் சாப்பிட்டதும் தான், சுசீலாவுக்கு ஒரளவு களைப்பு நீங்கியது. பச்சை உடம்பு; சிணுங்கல் இருமல் வெடித்தது. மூச்சு வாங்கியது. பிளாஸ்கை மூடிவிட்டுத் திரும்பிய தங்கையை நோக்கி, 'சுமதிக்கு என்ன அக்கா வச்சிருக்கேன்னு கொஞ்சம் முந்தி கேட்டியே? உனக்கு என்னம்மா வேனும்? உன் அத்தான் கையிலே சொல்லி, பொம்மை பிஸ்கட் வாங்கியாரச் சொல்லட்டா?’ என்று பாசம் பொங்கி வழிந்திட, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கேட்டாள் சுசீ. அறியாப் பிராயத்தில் தங்கையோடு ஆடிப்பாடி மகிழ்ந்திட்ட நாட்களெல்லாம் கனவல்ல.

'சின்ன வயசிலே நீ எனக்கு அம்மாவுக்குத் தெரியாமல் வாங்கிக் கொடுத்த பொம்மை பிஸ்கட் பத்தாதா, அக்கா? அந்த அன்புக்கே நான் உனக்கு ஏழேழு ஜன்மத்துக்கும் நன்றிக்கடன் பட்டவளாச்சே? நான் ரொம்ப நாளாய் ஆசைப்பட்டுக்கிட்டிருத்த ஜீவனுள்ள விளையாட்டுப் பொம்மையையும் இப்போ நீ பெற்றுத் தந்திட்டே! அப்புறம் எனக்கு என்ன வேணும், அக்கா? உணர்ச்சிகளின் சுழிப்பில் சொற்கள் சுழித்தன.

சுசீலா மெய்ம்மறந்தாள்.