பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16


சுந்தர் மெய்மகிழ்ந்தான்: சுந்தரும் சுசீலாவும் பெருமையுடன் பார்த்துக் கொண்டனர்.

அம்மாவின் வெள்ளைப் புடவையைக் கண்ட சுமதி வெளிப்பக்கம் நடந்தாள்.

குழந்தை ஆடாமல் அசையாமல் உறங்கிக்கொண் டிருக்கிறது.

"அத்தான், காலம்பற பலகாரம் சாப்பிட்டீங்களா?”

!* "எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்களேன், அத்தான்'

"ஊஹஅம்; நான் சாப்பிடல்லே, சுசீலா சென்னையில் ஏறி, தஞ்சாவூர் ஜங்கஷனில் இறங்கினதும், ஒரு கப் காப்பி சாப்பிட்டேன்; அங்கேயிருந்து இங்கே புதுக்கோட்டை வந்ததும் பஸ் ஸ்டாண்டிலே ஒரு கப் காப்பி குடிச்சேன், அவ்வளவுதான்!”

'ஏங்க, பசிக்கவே இல்லீங்களா? வியப்புடன் குழந்தைத்தனமாகக் கேட்டாள் இனியபாதி.

'ஊம்'-வாழ்வின் உயிர்ப்பங்காளியின் விடை இது.

"மகனைப் பார்த்த சந்தோஷத்திலே உங்களுக்குப் பசிகூட மறந்து போச்சுப் போலே!”

கம்:

"நல்ல அத்தான், போங்க!”

“உனக்கு நான் எப்பவுமே நல்ல அத்தானகவே இருப்பேன். ஆனால், நீ சொல்லறமாதிரி, நான் இங்கே இருந்து போகமட்டும் மாட்டேன்! ஏன் தெரியுமா, சுசீ'

'ஏளும்?"