பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17


"இன்னம் கொஞ்சநேரத்திலே மணி அடிச்சிடும்; அதுவரைக்கும் உன்னைப் பார்த்துக்கிட்டு, உன் பக்கத்திலேயே, இந்தக் கட்டிலின் ஒரமாய் உட்கார்ந்து கிட்டே இருக்கவேணும்னு மனசுக்குத் தோணுது'

தாபமும் தாகமும் சூழ்ந்திட, ஏக்கத்தோடும் உருக்கத்

தோடும் பேசிய அத்தானின் பேச்சு அவளைத் தொட்டது. தன்னை விழுங்கி விடுகிறமாதிரி பார்த்த அந்தப் பார்வை' அவள் நாணத்தைத் தூண்டிவிட்டது. இனம் புரியாத என்னவோ ஒரு சோகமும், இனம் புரிந்த ஆனந்தமும் பெருமூச்சை நெட்டிப் பிடித்துத் தள்ளின; கண்களைத் தாழ்த்தியபடி, சேலையைச் சரிசெய்து கொண்டு, கணவனே ஆழமாக நோக்கினுள் சுசீலா.

“உங்க இஷ்டப்படி செய்யுங்க. அத்தான். நீங்க என் பக்கத்திலே இருந்தால், எனக்கும் நிம்மதியாகவே இருக்கும். பசி பொறுக்கமாட்டீங்களேன்னுதான், சாப் பிட்டுட்டு வரச் சொன்னேன். மறுபடியும் சாயந்தரம் நாலரைமணிக்கு விலிட்டர்ஸ் டைம் ஆரம்பமாச்சுதானல், ஆறுமணிவரை நீடிக்கும். அப்பவும்கூட, நீங்க வந்து என் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கலாம். இடைநடுவிலே ஒரு சின்னப் பிரிவு; அவ்வளவுதான்! இனி நாம் ரெண்டு பேரும் ஏன் பிரியப்போருேம்? உங்க பக்கத்திலே நானும், என் பக்கத்திலே நீங்களுமாகத்தானே இனிமேல் இருக்கப் போருேம்......கவலைப்படாதீங்க அத்தான் - கிணற்றுத் தண்ணிரை வெள்ளம் கொண்டு போயிடாதுங்க!...”

தொடர்ந்த பேச்சைத் தொடரவிடாமல் தடுத்தது புகைச்சல் இருமல். கண்மூடிக் கண்திறப்பதற்குள், அவள் களைத்துச் சளைத்துப் போய் விட்டாளே?

"சுசீ...சுசி!” என்று பதறிஞன் சுந்தர். வேர்வை கழுத் திலும் நெற்றியிலும் பெருகியதைத் துடைத்துவிட எண்ணினன்; ஆஸ்பத்திரி என்ற நினைவு எழுந்ததும், கம்’ மென்று இருக்க வேண்டியதாயிற்று.