பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அ.த்...தான்'

அன்பிற்கு அடைக்குந்தாழ் உண்டா, இல்லையா என்ற தத்துவ விசாரம் இப்போதைய நிலையில் அவனுக்குசுந்தருக்கு வேண்டாத சமாசாரம். சயனக் கூடத்திற்கு மட்டும் கட்டாயம் அடைக்கும் தாழ்ப்பாள் வேண்டு மென்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது; ஆகவே, அவ்வாறு செய்தான். நேர் உச்சியில் பொக்கை வாய்ப் புன்னகையுடன் காட்சிதந்த காந்தி மகாத்மாவை ஏறிட்டுப் பார்க்கும் நேரமல்லவே இது!

- - ன் தானே?

காலம புள்ளமானதானுே:

பூக்கள் மணக்கின்றன.

பூவையும் மணக்கின்ருள்.

பாலும்கூட மணக்கிறது.

ஆளுல், மெளனமும் மணக்குமா?-மணக்கலாமா?

கணங்கள் சில மோனத்தவம் இயற்றின.

அவன் அவளைப் பார்த்தான்.

அவள் அவனைப் பார்த்தாள்.

பேசாத மெளனத்தில்தான் பேசவேண்டிய அந்தரங் கங்கள் வாய்விட்டும் மனம் விட்டும் பேசும் போலும்!

அவள் வெள்ளித் தம்ளரில் இருந்த பசுவின் பாலே எடுத்து நிதானமாகவும் நளினத்தோடும் அத்தானிடம் நீட்டினுள் பால் குடியுங்க, அத்தான்!”

"ஓ!’ என்று நமட்டுச் சிரிப்பைக் கக்கிக்கொண்டே, கன்னி மலர்ச் சுமதியின்மீது தாவினன் சுந்தர்.

சுமதிக்கு வேர்த்துக் கொட்டியது. வெட்கம் விரவிய நடுக்கம் ஏற்பட்டது; தடுமாறிள்ை; தலை திடுதிப்பென்று: