பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164


ஆத்திரத்தோடு பற்றி எரியும் தெருப்புத் துண்ட மொன்று இருந்திருந்தாற்போல தன்னுடைய இருதயத் துடிப்பில் பட்டுவிட்ட மாதிரி, வேதனையோடு-வேதனையின் நெட்டுயிர்ப் போடு துடிதுடித்தான் சுந்தர். சுமதி...சுமதி: என்று வீரிட்டான்; அலறிஞன். அவளுடைய தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மாரகச் சேலையை இருந்த இடத்தில் சேர்ப்பித்தான் சுந்தர், அவனுக்கும் இப்போது தலைசுற்றியது.

தலைக்குமேலே மின்விசிறி சுற்றியது. மீண்டும் வாயால் எடுத்தாள் சுமதி, 'சுமதி சுமதி!' விம்மி வெடித்தான் சுந்தர். பேயறை பட்ட மாதிரி ஆகிவிட்டாள் சுமதி. தன் காலடியில் இருந்த பூமி பிளந்து, தான் அப்பிளவிலே அகப் பட்டுக் கொண்டது போல அவள் தவித்துத் தடுமாறினுள்; மெதுவாக எழுந்து, கூஜாவிலிருந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்து, முகத்தையும் கழுவிக் கொண்டாள்.

பால் பிடிக்காதா உனக்கு?’’ "ஏன் பிடிக்காதுங்க?

பின், ஏன் இப்படி திடுதிப்னு வாந்தி பண்ணிட்டே?” அதுதானுங்க, எனக்குப் புரியவில்லை!’ "அதிசயமாயிருக்கே, சுமதி: 'உங்களுக்கு மட்டுமில்லை, எனக்கும்தான் அதிசயமாக இருக்குதுங்க, அத்தான்!”

சுந்தர் விளக்குமாறு தேடி, அறையைச் சுத்தப்படுத்தத் தயாரானன்.

சுமதி ஒ’வென்று கதறிவிட்டாள். நான் ஒருத்தி இருக்கேனே, அத்தான்?-அதை மறந்திட்டீங்களா?”

அம்மன் குங்குமம் நெற்றி மேட்டிலிருந்து கரைந்து விழி முனைகளிலே ரத்தக் கண்ணிராக வழியத் தொடங்கியது.