பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166


விதி தன்னுடைய விளையாட்டுக்கென்று பிரத்தியேக மானதோர் ஆடலரங்கை ஏகபோக உரிமை பாராட்டி, அங்கே அப்போது நிர்மாணித்துக் கொண்டு விட்டதா, என்ன?

எங்கெங்கு நோக்கினும் அமைதி!--பயம் செறிந்த அமைதி!--பயமூட்டும் அமைதி:

அன்புச் சுமதி யாதொரு வினையும் விக்கினமும் இல்லாமல் மயக்கம் தெளிந்து நல்லபடியாகப் பிழைத்து எழுந்துவிட வேண்டுமே என்னும் பிரார்த்தனையுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, முதலிரவுப் படுக்கையின் கூடத்தில் வந்து நின்ருன் சுந்தர்:தெய்வமே!...

என்ன ஆச்சர்யம்!

தனக்கு எதுவும் நேர்ந்து விடவில்லை என்பதைப் பிரகடனப் படுத்தும் பாவனையில் சுமதி சகஜமாகக் குழந் தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிருள்! உடுத்துக் கொண்டிருந்த ரோஜா நிறப் பட்டில் திட்டுத் திட்டாக அங்கே ஈரம் ஊறியிருந்தது ஒளி வெள்ளத்தின்ே வெளிச்சம் போட்டமாதிரி பளிச்சென்று தெரிந்தது.

சுமதி!' என்று ஆனந்தப் பரவசத்துடன் விளித்தான் சுந்தர். உணர்ச்சிகளின் நிலை தடுமாறிய கொந்தளிப்பில், இதழ்கள் துடித்தன. உடம்புக்கு ஒண்னும் இல்லையே. சுமதி' என்று பரிவுடன் நலம் விசாரித்தான்.

கதிர் முத்தம் படப்பட, மடல்மடலாக விரிந்து மலகும் கமலமாக ஆளுள் சுமதி. பாங்கான முறுவல் பாங்காக நெளிந்தது. பயப்பட்டுப் போயிட்டீங்களா, அத்தான்? என்ைேட உடம்புக்கு அப்படி என்ன வந்திட முடியும்? என்னமோ ஒரு திடீர் மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்திட்டேன்!” என்று சமாதானம் கூறினுள் அவள்,

நல்லவேளை. நான் பிழைச்சிட்டேன்!'