பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#67

'நானும்தானுங்க, அத்தான்!”

அப்போது, அங்கே, குமார் தோன்றினன்.

குமாரைக் கண்டதுதான் தாமதம், பாம்பினைக் கண்ட போக்கில் பயந்து போய் தெய்வநாயகி அம்மாள் அப்போதே ராஜாவுடன் ஒதுங்கி விட்டாள்; அவளைத் தொடர்ந்தாள் சுஜாதா.

“டாக்டரம்மா வந்தாச்சு; எல்லாரும் வெளியே வந்திடுங்க,’ என்ற உத்தரவைப் பிறப்பித்தான் குமார்; சுருட்டை முடிகள் தாறுமாருகப் பறந்தன. முகத்திரையிலே கலவரமும் கலக்கமும் பீதியுடன் கோடுகளைத் தடம் தப்பிக் கிறுக்கி விட்டிருந்தன.

லேடி டாக்டர் உள்ளே நுழைந்தாள்.

சுந்தர் நடப்பை விவரித்தான்.

"சரி; நீங்களும் சற்றுநேரம் வெளியே இருக்கவேணும்,' சன்று சொல்லி, கதவுகளை அடைத்துக் கொண்டாள் டாக்டர். அவள் வாயும் இரண்டொரு கேள்விகளுக்குப் கிறகு தன்னைப் போல அடைத்துவிட்டது.

சுமதி நிர்மலமாக நின்ருள்: நாடிக் குழல் மெளனமான விதிகை நினைவூட்டி விரிந்தது.

சோதனே நடந்தது; முடிந்தது. டாக்டர் பாலாமணி கதவுகளைத் திறந்துவிட்டாள். சுந்தர் உள்ளே ஓடி வந்தான். 'ஸார், உங்க சம்சாரத்துக்குப் பயப்படும்படியாக ஒண்ணும் இல்லை; எல்லாம் நல்ல, சந்தோஷமான சங்கதி தான்! உங்க மனைவி கருத்தரிச்சிருக்காங்க!...அநேகமா நாற்பது நாள் கருவாக இருக்கலாம்' என்று நிதானமாக, ஆனல் அவசரத்துடன் செய்தி சொன்னுள் டாக்டரம்மா, பணத்துடன் பறந்து சென்ருள்!-அவள் கடமை அவ்வளவு தானே?