பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169


பிடுங்களேன்...ஐயோ, பேசவே மாட்டிங்களாக்கும்!” கூப்பிய கரங்களோடு நான்கு சுவர்களும் ஆமாம், அந்தச் சாந்தி முகூர்த்தக் கூடத்தின் நான்கு சுவர்களும் எதிரொலிக்க ஒலமிட்டாள் சுமதி-சுந்தரின் சுமதி.

சுந்தர் அசையவேண்டுமே!-அடவேண்டுமே!-மூச்!

ఫ్రో

சுமதிக்குப் பித்து தலைக்கேறி விட்டதா?-கழுத்தில் ஜேம்’மென்று கிடந்த கதம்ப மாலையைக் கழற்றிப்பட்டு மெத்தையில் வீசி எறிந்தாள். சிற்பி செதுக்காத பொற்சில்ே கனவு கண்டு விழிப்பவளே ஒத்து, கண்களை மூடி முடித் திறந்தான்; திறந்து திறந்து மூடினுள், பாவம், கனவுக்கு எங்கே போவாளாம் பாவை?...ஆகவே, இமைப் பொழுது எதையோ நினைவு படுத்திப் பார்க்க முயன்ருள்:-"நாற்பது நாள்...பச்சிலை மருந்து மாயம்1-அடிபட்ட பெண்புலியெண், பதுங்காமல் கொள்ளாமல், வெளியே பாய்த்தாள் சுமதி.

அப்போது

சுமதியை எதிர்கொண்டு வந்து நின்ருன் குமார்மிஸ்டர் குமார்!

தேடிப்போன மூலிகை காலில் சிக்கின கதைதான்!

நான்கு சுவர்கட்கு மத்தியில் உருவான-உருவாக்கப் பட்ட அந்த முதல் இரவுப் பள்ளி அறையின் கதவுகளுக்கு அடைக்கும் தாழ் வேண்டுமென்பதுதான் குமாரின் கருத்தும் போலும்!-தாழ் இட்டான்; திரும்பினுன் குமார்.

இரவைப் பகலாக்க, வெள்ளமாக ஒடிக் கொண்டிருக் கிறது ஒளி.

ஓங்காரக் காளியாக உருக்கொண்டு-உருக்காட்டிக் கொண்டிருக்கிருள் சுமதி:

சுமதி!'

குமார்!’