பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| f |

சுமதி...நீ என்றைக்கோ என் கனவுப் பொருளாக ஆனவள்; என் கனவுப் பொருளைக் காட்சிப் பொருளாகவும் கண்டு, பரிசுத்தமான அன்போடு அனுபவிக்கவும், அனுபவிச்சுப் பெருமைப் பட்டுப் பெருமிதம் அடையவும் கோட்டை கட்டினேன்; ஆனல்...ஆனால், விதி அந்தக் கோட்டையைத் தவிடுபொடியாக்கி இடித்துத் தரைமட்ட மாக்கிடுச்சு, ஆளுலும் கூட. என்ளுேட நிர்மலமான மனக் கனவைச் சிதைச்சுச் சிதிலமடையச் செய்யக் கூடிய அதிகாரத்தை நான் விதிக்கு வழங்கிவிடத் தயாராக இல்லையே...

'சுமதி, நீ என்வரை கொம்புத்தேன் ஆகியிருக்கலாம்; ஆளுல், நான் வெறும் முடவனுக விரும்பவில்லை!-நீ என் மட்டிலே எட்டாப்பழம் ஆணுய்...ஆனல், நானே அந்த சட்டாத பழத்தை சீ, சீ இந்தப் பழம் புளிக்கும்’னு ஒதுக்கி, அப்பாவியாகிவிட என் பவித்திரமான அந்த மனசு இடம் கொடுக்க ஒப்பவில்லையே?-ஆகச்சே, எட்டாத மாங்கனியைகைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போய்விட்ட அந்த அதிசய மாங்கனியை எட்டிப் பறித்துச் சுவைக்கக் குறி வச்சேன் என்னுடைய பள்ளிஅக்கிரகாரத்துக் குருவான சாமியார் ஒரு ரகசியப் பச்சிலையை-நினைவை மயக்கி, அந்த நினைவை மறக்கவும் மரக்கவும் செய்யவல்ல ஒரு பேரதிசயப் பச்சிலைப் பொடியை, அன்று நீ எனக்காகக் கொண்டாந்து தந்த செம்புத் தண்ணீரிலே நீ அறியாமலே துளவிக் கலந் திட்டேன். என் திட்டப்படியே, வழக்கமாக உனக்குவரும் இருமல் அப்போதும் வந்திடுச்சு; உனக்குப் பழக்கமாகத் தேவைப்படும் தண்ணிருக்கு, அந்தச் செம்புத் தண்ணீர்பச்சிலைத் தண்ணீர் பயன்பட்டுச்சு, கைகொடுத்திச்சு உனக்கு! அந்த அற்புதத் தண்ணீரை நீயாகவே குடித்தாய்!...

'சுமதி!...நீயும் நானும் மாத்திரமே உலகமாக அமைஞ்சிட்ட ஒரு நல்ல நேரத்திலே, நீ அந்தப் பச்சிலைத். தண்ணீரைக் குடித்ததன் இன்ப விளைவாய், நான் எதிர்