பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

சுந்தருக்கு இப்போது வெட்கம் வந்து விட்டது, வெட்கம்!

குழந்தை---கப்சிப்!

சுமதி திரும்பவும் குழந்தையை அழகு பார்க்கத் தொடங்கிவிட்டாள். பேசும் பொற்சித்திரத்தைக் காணக்கான, அவள் பேசாத பொற் சித்திரமாகி விட்டிருக்கலாம்!

“தங்கச்சிப் பொண்னே! குழந்தையை இனிமேல் நீயே வேணுனாலும் வச்சுக்கிடலாம். மணி அடிச்சாச்சு; கேட்டைப் பூட்டிடப்போறாங்க. அத்தானோடே போய், வேணுங்கிறதை வெட்கப்படாமல் சாப்பிட்டு வாம்மா. அத்தானையும் நல்லாச்சாப்பிடச் சொல்லு, சாயங்காலம் உன்கிட்டே ரொம்ப விஷயம் பேசவேனும், சுமதி!”

ஓரக்கண்ணுல் அக்காவை அளந்த வண்ணம், “ஆகட்டும்,” என்றாள் சுமதி. கவர்ச்சி கனிந்த செவ்வதரங்களிலே நயமான புன்னகை ஒன்று விநயமாக ஊர்ந்தது, பூநாகமென!

சுந்தர் மெளனப்புன்னகை சொரிந்த விவரத்தை சுமதி எங்ங்னம் அறிவாள்? “ஊம், புறப்படுங்க,” என்று தூரண்டினுள் சுமதிக்கன்னி.

“உத்தரவு!”

சுசீக்கு வாயெல்லாம் பல்!...