பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூன்று


கீழராஜ வீதி

கீழ ராஜவீதிதான் புதுக்கோட்டைக்கு ஜீவநாடி; அதாவது, ஜீவனும் அதுதான்; நாடியும் அதுவேதான்! அன்றும் சரி, இன்றும் சரி, அப்படியேதான்! ஆனால் சமஸ்தானமாக இருந்த காலத்தில் அதன் ‘மவுஸே’ அலாதிதான்; அந்தஸ்தும் தனிதான்!

சங்கராந்தி முடிந்து விட்டாலும், கொட்டு முழக்கும். கும்மாளமும் நிதிவசூலும் முடியவில்லை!

அவர்கள் இருவரும்—சுந்தரும் சுமதியும் வடக்கு இரண்டிலிருந்து திரும்பி நடந்து மடங்கிக் கீழ ராஜவீதியின் மையத்தில் நின்றபோது, சாந்தநாதர் சந்நிதி தரிசனம் தந்தது!

“ரொம்பப் பசிக்குதா, சுமதி?” என்று கேட்டான் சுந்தர்.

“இல்லீங்க,” என்றாள் சுமதி.

“அப்படின்னா, கொஞ்சம்தான் பசிக்குதோ?”

“ஆமாங்க!”