பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அனுபவிக்க இங்கே இப்போது குமார் இல்லையே என்றும் வருந்தினான். சுமதிக்காக அனுதாபப்பட்டான்!...

இயந்திரத்தோடு இயந்திரமாகப் பழகியவன்--பழக்கப்பட்டவன் சுந்தர்!--அடிக்கடி காப்பி வேண்டும்; நேவிப்ளு’ சிகரெட்டும் வேண்டும்!

கதவுகள் தட்டாமலே திறக்கப்பட்டன!

முதலிலே பாய்ந்தவன் சுந்தர்தான்!

அடுத்த சீட்டு சுமதிக்கு.

குழந்தைக்கு நல்ல தூக்கம்.

சுசீ ஏன் அப்படிச் சோர்வுடன், களைத்துச்சளைத்துக் காணப்படுகிறாள்?

சுந்தருக்குச் 'சுரீர்' என்றது. "சுசீ", என்னவோ போல் இருக்கியே, ஏன்?" என்று கேட்டான்; இனம் விளங்காத பயம் ஆட்கொண்டது; இடது கண் ஏன் இப்படித் துடிக்கிறது?

நெஞ்சைத் தடவி விட்டுக் கொண்டிருந்தாள் சுசீலா. அத்தானை ஏற இறங்கப்பார்த்தாள். அவள் பார்வையில் ஒர் ஏக்கம், ஒரு தவிப்பு; ஒரு சோகம். "நெஞ்சை வலிச்சுக்கிட்டு இருக்குதுங்க; அவ்வளவுதான்," என்ருள். உடலின் உபாதை சொற்களிலே பாதை காண்பித்து விடக்கூடாதே என்று கவலைப்பட்ட மாதிரி, வெகு நிதானமாக இருந்தது அவளது பதில்.

சுசீயைத் தெரியாதா சுந்தருக்கு? பதட்டத்தோடு எழுந்தான்; "லேடி டாக்டரைக் கூட்டிக்கிட்டு வந்திடறேன்; சுசீ", என்று சொல்லியபடி சுமதியின் பக்கம் திரும்பி, "சுசியைப் பார்த்துக்க சுமதி," என்று கூறிவிட்டு நகரத் தொடங்கினான்.

"அப்படி ஒண்ணும் சீரியஸ் இல்லீங்க, அத்தான். இன்னம் பத்து நிமிஷத்திலே டாக்டரம்மா 'ரவுண்ட்' வந்திடுவாக!...அப்போது பார்த்துக்கலாம். நெஞ்சுவலிக்கு