பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

உபசாந்தியாய்ச் சாப்பிடச் சொல்லி மாத்திரை தந்திருச்காங்க அம்மா. இதோ, பாருங்களேன்!” சிவப்பு மாத்திரை வெளுத்திருந்த அவள் கையில் பளிச்சிடுகிறது! இப்படி ஒரு சிவப்பில் இப்படி ஒரு மாத்திரையா?

மறுபடி அவன் ஆதங்கத்தோடு வாழ்க்தைத் துணைவியைப் பார்வையிட்டான். கண்கள் தளும்பிட, சுமதி தன் அக்காவை ஊடுருவிக் கொண்டிருந்ததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. "சுமதிக்கு என் சுசீன்னா ஒரு தனிப்பிரியம்--பாசம்!”

என்னவோ கேட்கத் துடிக்கிறாள் சுசீலா!--

என்னவோ சொல்லத் தவிக்கிறாள் சுமதி?--

இதற்கிடையிலே:

குழந்தை அழுத்து.

சுமதி தொட்டிலுக்குத் தாவினாள்

"பத்திரம்...ம்...பீச்சங் கையைக் குழந்தையோடதோளிலே கொடுத்துப்பதமா அணைச்சுக்கடி, ஆத்தா! நாளைக்கே நீயும் ஒரு பாப்பாவுக்கு அம்மாவாக ஆகப்போறவளாச்சேர்?--இப்பவே பழகிக்கிட்டால்தான் நல்லது. ஒரு ஆத்திரம் அவசரமென்றால், என்னோட குழந்தைக்குச நல்லதுதானே? சரி, எங்கையிலே கொடுத்திடு, தங்கச்சி, எனக்கு ஒண்னும் இல்லை; முதலிலே நீ மூஞ்சியைத் துடைச்சுக்கிடு! உஸ்...உன் அன்பு அத்தான் உன்னே நையாண்டி பண்ணக் கூடாது அல்லவா?”

எவ்வளவு வக்கணையாகவும் வாஞ்சையாகவும் பேசி விட்டாள் அக்காக்காரி! மஞ்சள் வெய்யிலில் அவளுடைய வெளிறிய வதனம் பரிதாபமாக விளங்கியது, பாவம்!

சுமதி நாசூக்காக, மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். அந்தக் கடிதம் 'ப்ளவுஸை உறுத்திக் கொண்டிருக்கிறது!-- 'குமார் விஷயமாய் அக்கா 'ஓ.கே! சொல்லிட்டா, இந்தத் தை கடைசிலே கூட எங்க கலியாணம் ஜாம், ஜாம்னு நடந்து