பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

முடிஞ்சிடுமே!’ மாவின் வெள்ளைப்புடவை தன் நினைவுகளைப் பசுமையாக்கிப் போர்த்துக்கொண்டு எங்கெல்லாமோ இட்டுச் சென்ற அதிசயக்கூத்தையும் அவள் உணராமல் இல்லைதான்.

சுந்தரின் சிந்தனைகள் எங்கோ அலைகின்றன!

"சுமதி!...”

பார்வையாளர்களின் நெரிசலிலும் சந்தடியிலும் சுசீலா மறுபடி கூப்பிட வேண்டியதாயிற்று. தொண்டை வறண்ட தால், குரல் கிறீச்சிட்டது. வந்த தங்கையிடம் தூங்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டுபோய்க்கிடத்துமாறு கை அடையாளம் செய்தாள். சுமை கழிந்தபின், ஒர் ஆயாசப்பெருமூச்சு.

அதோ, லேடி டாக்டர்!...

சுந்தருக்குக் காணுததைக்கண்ட குதுகலம்; தெம்பு; ஆறுதல், "அம்மா வர்றாங்க," என்று தெரிவித்தான், கண் களைத்துடைத்துக் கொண்டு.

தாயை நினைத்தவள், டாக்டரம்மாவைக்கண்டாள்; பரிசோதனைக்குப் பின்னே, மூச்சுக்காட்டாமல் அவள் நடந்து சென்றதிலிருந்து சுசீக்கு ஆறுதல் கனிந்தது- உடம்பில் குற்றம் குறை இருந்தால்தான், அவள் வாயைத்திறப்பது வழக்கம் என்ற அந்தரங்கம் கூட சுசீக்கு அத்துபடி.

சுந்தர் டாக்டரம்மாவைப் பின்தொடர்ந்தான். "சுசீக்குக் கொஞ்சம் முன்னே "செஸ்ட்பெயின்" வந்திடுச்சுங்கம்மா," என்று கூறினான்; ஸி. எம். ஒ. சொன்ன தகவலைச் சொல்லத் திரும்பினான்: "கைவசம் வச்சிருக்கிற சிவப்பு மாத்திரையைச் சாப்பிடச் சொன்னங்க," என்றான்.

தை பிறந்துங்கூட, கூதல் இன்னமும் மாறவில்லையே?

சுசீலாவின் வலது கையில் ஊசலாடிக் கொண்டேயிருந்த அந்தச்சிவப்பு மாத்திரை திரும்பவும் 'டேஞ்சர் சிக்னல்