பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

முதலிலே கண்ணைத் துடைச்சுக்கடி! உங்கிட்டே நான் ரொம்பப் பேசவேணும். இப்ப முடியாது. தங்கச்சிப் பொண்ணே! உன்னோட அன்பு அத்தானோட கண்ணிரைத் துடைக்க வேண்டியது உன் கடமை என்கிற விஷயம் கூடவா உனக்கு மறந்து போச்சு?..."

சுசீலாவுக்கு ஆற்றாமை மேலிட்டது.

மெளனம் ஒரு பாஷை என்றால், அதற்குப் பேசத் தெரியவேண்டாமோ?

இருந்திருந்தாற்போல சுசீலா மெய்ம்மறந்து சிரித்தாள்; விதியின் எழுத்தைத் துப்புக் கண்டுபிடிக்கத் தவித்தவள் மாதிரி அவள்சிரித்த அந்தச்சிரிப்பின் அட்டகாசத் தொனி அமைந்தது. பிறகு, கையிலே விதியாக மெளனம் சாதித்த சிவப்பு மாத்திரையை நோக்கினால். அப்பால், பக்கவாட்டில் திரும்பி, குழந்தையை ஊடுருவினாள்; பின்னர், எதிர் வசத்தில், வெண்ணிறஆடை அசைந்தாட, மறைந்திருந்து தன்னேயே பார்த்துக் கொண்டிருந்த அன்னையைப் பார்வையிட்டாள். அதே விழிவிரிப்பிலே, சுந்தரும் சுமதியும் நிழலாடத் தவறிவிட வில்லையே?

மணி ஐந்தரை,

பாப்பா விழித்தது.

சுமதி ஓடினாள்.

"அத்தான், நீங்க போய்க் குழந்தையை எடுத்திட்டு வாங்க,” என்றாள் சுசீலா. "சுமதி ஏற்கனவே பிள்ளைபெற்றவள் மாதிரி கச்சிதமாய்க் குழந்தையை எடுக்கப்பழகிக்கிட்டா; நீங்களும் நம்ப ராஜாப்பயலை எடுக்கிவச்சுச்சமாதானப்படுத்தக் கத்துக்க வேண்டாமா? நான் எங்கானும் போயிட்டா, அப்புறம் குழந்தை அழுது அழுது தவிச்சுப் போயிடதா? ம்...அப்படித்தான்!. அவ்வளவேதான், பலே! சபாஷ், முதல்தரம்தான் கை நடுங்கிச்சு; இப்ப தேவலாமே, அத்தான்!” என்று கை கொட்டினாள்; உருண்ட மாத்திரையை மீண்டும் உள்ளங்கைக்குள் மூடிக்