பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கொண்டாள்; பூஞ்சிரிப்பு, பூந்தேறலாகச் சுவைத்திருக்கலாம்; வெளுத்த உதடுகளின் கரையிலே ஈரம் கரை காட்டிக்கரை சேர்ந்திருந்தது.

குழந்தையைப் பதனமாக ஏந்தி, முத்தம் பதித்துவிட்டு மடியில் கிடத்திக்கொண்டாள் சுசீ.

இப்போதுதான் சுந்தருக்கு நல்ல மூச்சு வந்தது. அழகான---கவர்ச்சியான---நேசம் மிகுந்த புன்சிரிப்பு அவனுக்குக் கண்ணுமூச்சி காட்டிக் கொண்டேயிருந்தது. இனியாகிலும் சுசீ மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டால் என்னவாம்?

"வேளை வந்தாச்சு; இதோ, நொடியிலே மாத்திரையை விழுங்கிடறேன், அத்தான்!”

"ம்!" சுந்தர் திச்சுட்ட மெழுகாகக் கரைகிறான்! சுமதி குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கலாகாதா?...

"இப்பத்தான் இன்னோரு ஆசை நினைபபு வருது!"

"சொல்லம்மா!"

'அம்மா’ என்ற பதச் சேர்க்கையில், சுசீயின் கண்கள் கலங்கிவிட்டன. "அத்தான், உங்க கையாலே எனக்குப் பூ வாங்கித் தந்து எத்தனை நாளாயிடுச்சு?" என்று அத்தானேக் கள்ளவிழிப் பார்வையால் அளந்தாள்.

"வாங்கிட்டு வாரேன்!” என்று சொல்லிவிட்டு, நகரத்தொடங்கினான் சுந்தர்.

"அத்தான், நீங்க ஆஸ்பத்திரி வாசலிலே எனக்கு வாங்கித் தந்த கதம்பத்திலே பாதியை அக்காளுக்கோசரம் ‘ரிசர்வ்’ செஞ்சு வச்திருக்கேன்,” என்று தெரிவித்து, கட்டிலுக்கருகில் இருந்த டம்பப் பையைக் குனிந்து எடுத்த போது, சோளியின் உட்புறம் ஒளிந்திருந்த அந்தக் கடிதம் கீழே விழுந்தது. கடிதத்தையும் பூவையும் எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள். பூவை அக்காளிடம் கொடுக்க