பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

வேண்டாங்க, அத்தான். வேண்டாம் நான் அதை ஒண்ணும் படிச்சிடமாட்டேன்; எடுத்த கையோடு உங்க கையிலே கொடுத்திடுறேன்!”

ε, ιδί"

சுந்தர் திகில் அடைந்தான். சுமதி அந்தக் கடிதத்தை வாசித்திருப்பாளோ? சுசீலாவின் சடலத்தை அரிமளத்துக்கு டாக்ஸியில் கொண்டு போக ஏற்பாடு செய்த நேரத்தில் கிடைத்த அந்தக் கடிதக் குறிப்பு பெட்டிக்குள்ளேயிருந்து எப்படி அம்பலத்துக்கு வந்தது?- நானேதான் எடுத் திருப்பேன்; பின்னே, யார் எடுப்பாங்க! யாருக்குத் தெரியும் அந்த உளவு? மாரியம்மா!...என்னை ஏன் உயிரோடே சித்திரவதை செய்கிருய்? மூச்சுக்காட்டாமல், என் மூச்சை எடுத்துக்கிடேன்; பிரச்னைகளாவது தீர்ந்திடட்டும்!...”

கடிதத்தைச் சுமதியின் கையிலிருந்து நிதானமாக வாங்கிக் கொண்டான் சுந்தர்; அதை ஆரம்பம் முதல் கடைசிவரை மீண்டும் வாசித்தான்; பிறகு, இந்த லெட்டரை நீயும் படிச்சுப் பார்க்கிறியா, சுமதி?’ என்று வினவினன்.

தயக்கத்துடன், உங்களுக்குள்ள லெட்டரை நான் படிக்கலாமா. அத்தான்?' என்று எதிர்வினத் தொடுத்தாள் மைத்துணி.

அப்படியென்ருல் தான் கண்மூடிக் கிடந்த வேளைகெட்ட வேளையிலே அக்கடிதத்தைச் சுமதி பார்க்கவில்லை, படிக்க வில்லை என்னும் நிலவரம் அவனுக்குப் புரிந்தது. புரிந்ததுடன் சரிதான்; மற்றப்படி, விளைவு-எதிர்விளைவு பின்விளைவு பற்றியெல்லாம் அவனுக்கு என்ன தெரியும்?ஆனால், ஒன்றே ஒன்று மட்டிலும் அவனுக்குத் தெரியும்; துல்லிதமாகவும் தெரியும்!-எண்ணிய எண்ணத்தில் உணர்ச்சிகள் விம்மின; புடைத்தன; சுழித்தன; சுசீ... சு...ம.தி!'