பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கடிதத்தின் உள்ளடக்கம் சுமதிக்குத் தெரிந்த விஷயந் தானே? அத்தான் உண்மையை மூடி மறைக்கவே மாட்டார். அத்தானைத் தெரியாதா, என்ன?-அத்தானைப் பற்றிய உயர்ந்த எண்ணமே அவளுக்கு அப்போதைய மனச் சங்கடமான நிலையில் அருமருந்தாகவும் அமைந்ததில் வியப்பு இல்லை.

"சுசீ...லாரி.சு...ம...தி!'

அவள் ஏறிட்டு, அமைதி கனிய நிமிர்ந்தாள். என் தெய்வம் சுசீயை-எங்க சுசீ அக்காவை இந்தப் பிறப்பிலே மட்டுமில்லை, இனி எடுக்கப் போகிற ஏழேழு பிறப்பிலும் கூட உங்களாலே மறக்க முடியாதுங்க, அத்தான்!... உங்களுக்கு ஆசையும் விருப்பமும் அதுவேயானல், என்னை நீங்கள் சுசீ என்றே தாராளமாக அழைக்கலாம்!-அது எனக்கும் பெருமையளிக்கும்; அந்தப் பெருமை எனக்கு மற்ருெரு பாக்கியமாகவும் அமைந்துவிடும்!” உணர்ச்சிகளின் சங்கமத்தில் கண்கள் வழிதிறந்தன.

அவன் பதில் சொல்லவில்லை; பெருமூச்சை மட்டுமே வெளியிட்டான். கடிதத்தைப் பிரித்து வைத்தபடி, சுமதி, இந்தத் தபால் எனக்கு மாத்திரம் இல்லை, உனக்கும் சம்பந்தப்பட்டதுதான்! நம்ம குடும்பத்திலே உனக்குத் தெரியாத அந்தரங்கம் என்ன இருக்க முடியும்? சரி, சரி. உனக்கே படிக்கணும்னு தோணுகிறபோது, நீயே எடுத்துப் படிக்கலாம்; உன் அக்காளோட பூஜைப் படத்துக்கு அடியிலேதான் வைக்கப்போறேன்,' என்ருன் சுந்தர்.

மறுபடியும் நழுவியோடிய அக்கடிதத்தை விரைவுடன் எடுக்கக் குனிந்தபோது, அவளுடைய சோளிக்குள் அஞ்ஞாத வாசம் செய்த கடிதமும் குழல் ஒளிச் சிதறலில் சிதறி வீழ்ந்தது. அத்தான் வைத்திருந்த கடிதத்தை சரிபார்த்துக் கொடுத்துவிட்டு, தன்னுடைய கடிதத்தை உள்ளங்கையில் மடித்து வைத்துக் கொண்டாள் சுமதி.

"நீயும் ஒரு கடிதம் வச்சிருக்கியே, சுமதி?”