பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

அவள் மிடறு விழுங்கியவளாக, இதுக்கு இப்போது வேலையே இல்லாமற் போயிடுச்சுங்க; ஒரு காலத்திலே இந்தக் கடிதத்தை-நான் எழுதி வச்ச இந்தக் கடிதத்தைப் பெரிசாக நம்பியிருந்ததென்னவோ பொய் இல்லீங்க. இதைப் படிக்க உங்களுக்கு மனம் செல்லாதுங்க', என்று விவரம் கூறினுள்.

"உன் அத்தானை உனக்குத் தெரியாமலா?...ஒரு காலத்திலே நீ எனக்கு எழுதியிருந்த கடிதத்தைத்தான் நான் காபந்து பண்ணி வச்சிருக்கேனே?...உன் கடிதத்தை உன் லெதர் பெட்டியிலே போட்டுவை; இந்தா, இந்தக் கடிதத்தை நான் சொன்ன இடத்திலே வச்சிடும்மா!'

நெஞ்சடியிலிருந்து சொற்கள் வெளிவருதன் விளைவாகத் தான், நெஞ்சடியில் குமைந்துகொண்டிருக்கும் துன்பச் சுமையும் பேசப் பேசக் குறைந்து வருகிறதோ?-திடீரென்று அவனுக்கு இப்பூலகின் நினைவு பிடரி பிடித்துத் தள்ளவே, தன்னைப்பற்றிய நிலையும் நினைவும் அப்போதுதான் அவனுக்கு எழுந்தனபோலும்!-தன்னை நினைத்ததும், சுசீயை நினைத் தான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டுவிட்டதோ? அடித்து வைத்த சிலையானுன்!

மணி பத்தாகப் போகிறதே! குழந்தைக்குப் பசி வந்துவிடும்!

அக்காவின் கணவர் தந்த கடிதத்தைச் சுசீலாவின் படத்தடியில் வைத்தாள் சுமதி: 'அக்கா! நீ இட்ட ஆணைக்கு நீயே இப்போது சாட்சியும் ஆகிவிட்டாயே.” அன்னையின் அணைப்பு சுமதிக்கு ஆறுதலாகவே அமைந்தது.