பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

母酸

மிஸ்டர் குமான்

உதயசூரியன் உதயராகம் புனைந்து மகிழவும், மகிழ், விக்கவும் தொடங்கிய நேரம் அது:

சொட்டு மருந்தைச் சப்பிச் சுவைத்து நப்பு’க் கொட்டிய குழந்தையின் முதற் புன்னகையில் சொக்கிப் போளுள் சுமதி. அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண் கொண்டமட்டும் அனுபவித்த அவள், தாய்க்கும் பங்குதர அழைத்தாள். தெய்வநாயகி அம்மாள் மாப்பிள்ளை இல்லாமல் இருக்க வேண்டுமேயென்ற தயக்கத்துடன் மெல்ல மெல்ல-மெள்ள மெள்ள ஆடி அசைந்து வந்து சேர்வதற்குள், ராஜாவின் புன்னகை மாறிவிட்டது கண்டு அவளுக்கு ஏற்பட்ட மனச்சோர்வு கொஞ்சநஞ்சமல்லதான். குழந்தையின் முதற் சிரிப்பைத் தரிசனம் செய்தபோதுதான். சுமதிக்கும் சிரிக்கத் தோன்றியது; ஆனால் அந்தச் சிரிப்புக்கும் சோதிப்பு ஏற்பட்டுவிட்டது. பச்சைமண்ணின் மனம்மாதிரி தான் அதன் சிரிப்பும் கணப்பித்தம்-கணச்சித்தம் என்னும் விதிக்கு உட்பட்டது போலும்!