பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

எண்ணிச் சீர்தூக்கிப் பார்க்கிற புள்ளிதான், ஒண்ணை மட்டும் திரும்பவும் ஞாபகப் படுத்துகிறேன். சுசீ உனக்கு வெறும் அக்கா என்கிற சொந்தத்துக்கும் மேலே, அவள் உனக்குத் தெய்வமாகவும் ஆகி, ஒரு புதிய உத்தரவையும் போட்டுப் புட்டுப் போயிட்டா!...

"இப்ப நீ புதுச் சுமதியாக்கும்!...... ஆனபடியினலே, உன்னுேட சுயநலத்துக்கோ அல்லது உன்னுடைய சொந்த ஆசாபாசங்களுக்கோ இந்தக் கடமையைப் பொறுத்த மட்டிலே இடமே கிடையாது; கிடையவே கிடையாது!நீ நாலும் தெரிஞ்ச பொண்ணு. நான் பெற்ற மகள் நீ என்கிறதை, அன்னிக்குச் சாவுக்கு வந்த குமார்கிட்டே-உன் மாஜி காதலர் குமார்கிட்டே நீ ஒட்டி உறவாடாமல், வெட்டி விலகி நடந்துகிட்டதிலிருந்தே நான் புரிஞ்சுகிட்டேன். என் வயிற்றிலே பால் வார்த்திடுவாய் நீ என்கிற நம்பிக்கையும் சத்திய ஜோதியாய் எனக்குள்ளே ஒளிகாட்டிகிட்டே இருக்குது; என் மாப்பிள்ளை என்னுடைய மாப்பிள்ளை யாகவே இருந்தாகணும். அந்தப் புண்ணியத்தை நீ கட்டிக் கிட்டு மகராஜியாக இருக்கவேனும் என்பதுதான் என்ளுேட நியாயமான ஆசை...ஊம், துருசுபண்ணிப் புறப்படு! எல் லாம் சரிதான்!...கிளம்படி அம்மா சுமதிப் பெண்ணே!”..

அம்மாவின் பேச்சுமட்டுமே நின்றது.

டபரா-தம்ளர் காப்பியை அமைதியாக வாங்கிக் கொண்டாள் சுமதி. துரங்கிக்கொண்டிருந்த செல்வனைத் திரும்பிப் பார்த்தாள். குழந்தை முழிச்சுட்டு அழுதால், நீ மாவைக் கலக்கிக்கொடு; சிரிச்சான்ன, எனக்குக் குரல் கொடு; நான் பறந்துவந்து எடுத்துகிட்டுப்போய் அத்தான் கையிலே கொடுக்கிறேன். அப்பத்தான், தாயைக் கொன்ன சேய் என்கிற தப்பான-பாவமான எண்ணத்தை அத்தான் மாற்றிக்கிட்டு, ராஜாமேலே ஒரு புதிய பாசத்தை வைக்கிறதுக்கும் ஒரு நல்ல, அயனை சந்தர்ப்பம் கூடிவரும்; கைகூடியும் வரும்' என்று குறிப்பிட்டாள்.