பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63


'அதுவும் சரிதான்,' என்ருள் அம்மா.

சுமதி நடந்தாள்; அக்கா தனக்குத் தாலி கொடுத்த மகாராஜனைத் தத்திக் குதித்த ஆனந்தப் பரவசத்தின் ஆரவாரத்துடன் அறிமுகம் செய்துவைத்த நிகழ்ச்சியும் அவளுடன் நடந்தது. நான் சொல்லலீங்களா? - அந்தச் சுமதிக் குட்டி இந்த ராசாத்திதான் சின்னக் குழந்தையி விருந்தே படுசுட்டி, இப்போது சமைஞ்சதிலேயிருந்து வெகு அடக்கம்; எங்க சுமதி வாத்தியாரம்மா. மறந்திடாதீங்க, அத்தான்' என்ற பெருமையின் பெருமிதத்துடன் சுமதிப் புராணம் படித்த சொற்களை அவள் மனம் பதிவு செய்து வைத்திருந்தது.

டேக்-டக்-டக்! ...

சுமதிக்கிச் சுரீர்” என்றது கடிகாரம் மாதிரி இதயத்தின் இதயமும் அடித்துக் கொண்டது தேடிய அத்தான், தனது ஆருயிர்ச் சுசீயின் அன்புச் சந்நிதானத்திலே அனல்பட்ட மெழுகாக உருகிக் கரைந்து கொண்டிருந்த காட்சியில் அவளும் அமிழ்ந்து அழுந்திப் போனுள் வழிந்த விழி வெள்ளத்தை வடித்துவிடக்கூட சிந்தை இழந்தவளாக, அப்படியே உயிர்ச் சிலையாகி நின்று, மோகினிச்சிலையாக நிலைத்துவிட்டாள், தன்னுணர்வு பெற்றதும், சுந்தரின் முதுகுப்புறம் நகர்ந்து, எதிர்ப்புறம் திரும்பிள்ை. ஒளியாகி நின்ற அக்காவையும் ஒளியின் நிழலாக நிற்கும் அக்காளின் புருஷனையும் மாறி மாறிப் பார்வையிட்டாள். சொக்கட் டான் ஆட்டத்திலே மாற்றப்பட்ட சோழிகள் போல ஆகி நின்ற சகோதரியையும் சகோதரியின் கணவரையும் ஜோடி கலைந்து பார்க்கப் பார்க்க, அவள் நெஞ்சம் வெடித்துச் சிதறி விடும்போலிருந்தது. படத்தின் அடியிலிருந்த அந்தக் கடிதம் அவளுக்குப் புதிய ரத்ததானம் செய்திருக்க வேண்டும், அத்தான்!” அழைத்தாள், அழைத்திடும் கடன் பூண்டவள்!