பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


திரும்பிஞன் சுந்தர். திரும்பும் உறவுக்கு அவன் உரிமை கொண்டவன்தானே? நீ வந்து ரொம்ப நாழி ஆகுதா, சுமதி?’ என்று சகஜமாகக் கேட்டான். வெய்யிலில் விழிகள் பளபளத்தன!

'இப்பத்தான் வந்தேனுங்க, அத்தான்!”

காப்பியைச் சுவைத்தான் அவன். இப்பத்தான் உன்னை தினச்சேன், நீயே வந்திட்டே' என்ருன். அதாவது, உன்னே அழைக்க வேணும்னு நினைச்சிருந்தேன்!’ மறு திருத் தப்பேச்சில் இங்கிதம் தொனித்தது.

சுமதிக்கு ஏனே பயம் கவ்வத் தொடங்கி விட்டது. காலி டபரா தம்ளரை ஏந்திக்கொண்டாள் ஏந்திழை. ‘என்னங்க அத்தான் விஷயம்? என்று நினைப்பூட்ட நினைத்த சமயத்தில், அம்மாவின் குரல் கேட்கவே, திரும்பிச்சென்ருள். போனசுவடு, வந்தசுவடு தெரியாமல் திரும்பி வந்தவள், சிரிக்கும் குழந்தையை அத்தானிடம் காண்பித்தாள்.

குழந்தையின் மோகனப் புன்னகை தந்தையைச் சொக்க வைத்ததில் வியப்பு இல்லை!...

"குழந்தையை நான் கொஞ்சநேரம் வச்சுக்கிறேன், சுமதி:

'ஒ' என்ருள் சுமதி. அவளுக்கு உண்டான அமை திக்கும் அகமகிழ்வுக்கும் அளவில்லை.

கணங்கள் தவழ்ந்தன.

குழந்தைக்கு அப்பாவின் மடி சுகம் அளித்திருக்கும்.

அழவேண்டுமே? ஊகூம்!

“குழந்தைக்குத் தான் வந்து சேரவேண்டிய இடம் இதுதான் என்கிற துப்புத் தெரிஞ்சிடுச்சுது போல!-அது தான் கம்மென்று கிடக்குது. இல்லையா, சுமதி?

"ஆமாங்க; வாஸ்தவம்தான்!”