பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


கணக்கிலே திறந்து கிடக்குதுங்களே, அத்தான்?' என்று

உரைத்து, அதற்கு நிரூபணமாக, திறந்திருந்த அவனது உலர்ந்த உதடுகளைத் தொட்டும் காட்டினுள் சின்னவள்.

தொட்டுணர்வு அவனை எங்கேயோ இட்டுச் சென்றது. சுமதியை விழுங்கி விடுகிற மாதிரி ஆழமாக உற்று நோக்கினன். கொஞ்சப் பொழுதாக நெஞ்சிலும் நினைவிலு: மாக நிழலாடி, ஒளியாடத் தொடங்கியிருந்த சுமதியைபுதுமைச் சுமதியை-புரட்சிச் சுமதியைப் பார்த்தான்; பார்த்தான்; பார்த்துக் மகாண்டேயிருந்தான்.

ஒரு பாட்டுப் போட்டால் என்னவாம்?

அவன் சிரிப்பே அவனைப் புதிராக்கியது; மயக்கியது. மயக்கியது சரி; மயங்கிலுைம் சரியே. ஆனல், ஒன்று: அவன் சிரிப்பு அவனைப் புதிராக்கினல் என்னவாம்? புதிரை விடு விக்கத் தெரியாதா சுமதிக்கு?

பாட்டு ஒன்று இட்டுக்கட்ட வேண்டும் அல்லவா?

பேசாத கண்கள் பேசவைக்கின்றன! சிரிக்கும் உதடுகள் சிந்திக்கச் செய்கின்றன:

மதுமலர் அவள்!

மதிமலரும் அவளே!

பெண் எனில் புதிரா?

இல்லை, இல்லவே இல்லை!

அவள் அன்பின் உரு!

பாசத்திற்கு இலக்கணம்! நேசத்திற்குக் கற்பகத்தரு!

பச்சை நரம்புகள் புடைத்தன.