பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


கனக் கண்டு விழிப்பதை ஒத்து, விழிகளே விரித்து வீசி, சுற்றுமுற்றும் திருஷ்டியை ஒட்டினன் அவன். மறுபடியும் காணுமற் போய்விட்டவள், இப்போது சட்டினிக் கிண்ண மும் கையுமாக வந்துவிட்டதில் அவனுக்குக் கொள்ளையான குதுாகலமே! மின்னுமல் முழங்காமல், இடிக்காமல் வெடிக் காமல், கோடை மழை பொழிகின்றதே?-சுசீத் தெய்வமே, உனக்கு ஒரு விதி உண்டென்று தப்புக் கணக்குப் போட்டிருந்தேன்; ஆன, நீயேதான் விதி என்கிற சத்திய நடப்பை இப்பத்தான் என்னலே புரிஞ்சுக்கிட வாய்ச் சிருக்குது!...நீ தெய்வம் இல்லையா?-அதனுலேதான். நீ மீள வந்து-என்னை மீட்கவும் வந்து, சுமதி உருவிலே விளையாடவும் விளையாட்டுக் காட்டவும் தொடங்கியிருக் கிருயா, தாயே?...சுசீ...மை டியர் சுசீலா!'

சட்டினியை ஊற்றினுள் சுமதி. வசம் கணித்துக் குனிந்து ஊற்றினுள். பச்சைக் கொத்தமல்லியும் கறிவேப் பிலைக் கொழுந்தும் கமகம'வென்று வாசித்தன; மணத்தை எழுத்துச் சேர்த்து வாசித்தனவோ?

பசி பொறுக்கமாட்டாமல் அவன் இட்டிலியையும் சட்டினியையும் கூட்டிப் பிசைந்து சாப்பிடலாஞன்.

அவளுக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. எட்டத்தில் அம்மாவின் சன்னச் சிரிப்பும் பின்னமடையாமல் கேட்கவே செய்தது. பயலும் இந்நேரத்தில் சிரித்து வைத்தால், பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக அக்காவும் சிரித்துக் கொள்வாள்!...

தம்ளர் நீண்டது.

'காப்பி ரெடியாகலையாக்கும்?’’

'இட்டிலி சாப்பிட்டவங்களுக்குத் தண்ணிர் குடிக் காட்டி, விக்கல் வந்திடுங்க. நிதானமாய் தண்ணிரைக் குடிங்க, அத்தான்!”

இறந்த காலத்தின் சோகத்தோடு அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்; நீர் குடிக்கும் பாவனையில், தேடிவந்த