பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


பருவ எழிலையும் குடிக்கத்தான் எண்ணியிருந்தான்! வெய்துயிர்ப்பு மலைப் பாம்பென நெளிகிறது.

"நாளேக்கு நீங்க ட்யூட்டி பார்க்கப் போlங்க!' என்று தெரியப்படுத்தினுள் சுமதி. அவள் பேசி வாய் மூடவில்லை. அச்சகப்பகுதியின் தலைவர் வந்து அவனை வேலைக்கு அழைத்த விவரம் அவளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது; தாழ்வாய்ப் புறத்தில் துளிர்த் துத் தெறித்திருந்த காப்பித் துளிகளைத் துடைத்துவிட்டாள். ".ே ப ப் ப ர் படிச்சுக்கிட்டிருங்க, அத்தான். பேப்பரிலே அதிசயச் சேதிகள் நிரம்ப இருக் காக்கும்! சமுதாய நீதிக்கு ஒரு புதிய பாடம் கிடைச் சிருக்கிற நேரமாச்சுங்களே? எனக்குப் பசிக்குதுங்க; போகட்டுங்களா?' என்று விடை கோரினுள், செல்லக் குழைவுடன்.

போயிட்டு வா,’ என்ருன் சுந்தர்.

கணநேரப் பிரிவுதான்!-என்ருலும் அப்பிரிவைக் கூடப் பொறுத்துக் கொள்ள மனம் இல்லாதவளாக, மறுகி மறுகி நின்ருள் சுமதி. பின்னர், காலடி எடுத்து வைத்தாள். "அத்தான், மிஸ்டர் குமாருக்குத் தஞ்சாவூருக்குத் தந்தி கொடுக்கச் சொன்னிங்க இல்லீங்களா?......இன்னிக்கே கொடுத்திடுறேனுங்க!” என்ருள். கணத்தில் அறிவித்து விட்டு, கணத்தில் மறைந்துவிட்டாள் சுசீலா மாதிரி அந்தம் சேர்த்து. சந்தம் சேர்த்துச் சிரித்த அந்தச் சிரிப்பு மட்டும் மறையவில்லை!

'சுமதி, உன் முடிவுதான் என்ன?-சுந்தருக்கு இருப்புக் கொண்டால்தானே?...

பாவம்! ...