பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்து

ஊதுவகத்திச் சாம்பல்

தெய்வநாயகி அம்மாள் பின்கட்டிலிருந்து நடைவழியாக அடுப்படிக்கு வந்து சேருவதற்கும், சுமதி இரண்டாம் கட்டிலிருந்து அடுப்புக்கூடம் வழியே நடையைத் தாண்டிப் புழக்கடைப் பக்கம் போவதற்கும் சரியாக இருந்தது.

சாம்பல் வண்ண நாட்டுக் கோழி ஒன்று, நீறுபூத்திருந்த அடுப்புச் சாம்பலை அலகால் கொத்திக் கிளறப்போக, அது சுட்டுத் தொலைக்கவே, நொய்' என்று கூவிக்கொண்டு சிறகடித்து ஓடியது.

சுமதியின் அன்னே கைகளில் ஒட்டியிருந்த ஒட்டடைத் துரசுகளை ஊதி எட்டித் தள்ளினுள் நீள்மூச்சு நீளமாகவே வெளியேறிற்று. எல்லாத்தையும் பொசுக்குன்னு பொசுக்கிப் பிடத்தான் யோசிச்சேன். பின்னலே, அப்படிச் செய்ய வேண்டாமே, அதுகளை ஒளிச்சு வச்சு ரகசியமாய் மறைச் சிட்டால் போதுமேன்னு தோணுச்சு பசி வயிற்றைக் கிள்ளியது. இனி பசிக்கக் கேட்பானேன்? மூத்த பெண்ணின் ஆணப்பிரகாரம், இளைய பெண் தன் அத்தானுக்குப் புதி தான வாழ்வு தரப்போகிருள் அல்லவா? பாவம்!--பசிக்