பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


கட்டும், பசிக்கட்டும்! பாரதத்தின் சரித்திர லட்சணங்களுள் ஒன்ருக இந்தப் பசிப் பிரச்சினையையும் சேர்த்து, வருத்தத் தி-ன் குறிப்புத் தந்து எழுதவில்லையா நேருஜி?

மகளே எதிர்பார்த்திருந்த தாய், பலகாரம் சாப்பிட லாமா, சுமதி?” என்று பரிவு சூழக் கேட்டாள்.

"இன்னிக்கினு ரொம்ப ரொம்பப் பசிக்குது, அம்மா’சுமதி அப்டெக்-வைடாலின்-எம் சொட்டு மருந்துச் சீசாக்களை ஒர் ஒரமாக நகர்த்தினுள்.

“எனக்கும்தான்!” என்ருள் அன்னே.

இருமுனைகளிலும் அர்த்த புஷ்டியான புன்னகை முனைப் படைந்தது. என்னவோ ஒரு சிறு ஒசை. திரும்பினுள்; குழந்தை புரண்டு படுக்க முயற்சி செய்தது புரிந்தது. ஆறுதல்.

தட்டுக்கள் கிறீச்'சிட்டன.

கத்திரிக்காய்க் கோசுமல்லி நிஜமாகவே வாய்க்கு ரொம்ப ருசியாய் இருக்குது, அம்மா! அத்தான் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதான்!”

"அதுசரி; நீ என்ன கடைசிலே இப்படிச் செஞ்சிட்டே?”

"என்னம்மா செஞ்சேன்? மனசறிஞ்சு நான் தப்புத் தண்டா ஒண்னும் செய்ய மாட்டேனே, அம்மா?”

"உன் தமக்கை உனக்கு இட்ட கட்டளைக்குப் பணிஞ்சு, நீ உன் அத்தானுக்கு இரண்டாவது வாழ்வு தரப்போறே! இங்கிதமாகவும் சமர்த்தாகவும் நீ அந்தப் பெரிங் காரியத்தைச் சாதிச்சிட்டே சாதிச்சுக்கிட்டே! அந்த நிமிஷத்திலேயே குமார் பிரச்னை முடிஞ்சு போச்சு, பின்னே, எதுக்கு குமாருக்குத் தந்தி பேசுறதாய் நீயே வலிய ஞாபகப் படுத்தினய், சுமதி?”

இரண்டு நிமிடம் சுமதி சிந்தன வசப்படலானள், தர்க்கரீதியாய் அம்மா கேட்பது நியாயம்தான்! ஆன லும்,