பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


மனிதாபிமானத்தின் அடிப்படையிலே, தர்க்கரீதியான அந்த நியாயத்தையும் கடந்ததான நேர்மை, உ ல கி ய ல் வாழ்க்கையில் இருக்கிறதே? குமாரை வரச் சொல்லித் தந்தி சொல்லும்படி அத்தான் உத்தரவு போடக்கண்டுதான் சிக்கல் பலுாகை ஊதி வெடித்து, ஒரு நல்ல முடிவு ஏற்பட்டது. குமார்-சுமதி காதல் சம்பந்தமாக, குமாரது மனப்போக்கைத் துருவி அறிந்துகொள்ள வேண்டுமென்பது அத்தானுடைய உள்நோக்கமாக இருந்திருக்கலாம். ஆணுல், எல்லாம் முடிந்த பிற்பாடு, இப்போது சுமதி வலியப்போய்க் குமாருக்குத் தந்தி கொடுக்க விரும்புவது ஏன்? காரணம் இதுதான். மாற்றி விதிக்கப்பட்ட விதியின் சூழலால், பழைய காதல் ஒப்பந்தம் மாற்றப்பட்டுத் தடைப்பட்டுவிட நேர்ந்த காரணத்தை விளக்கி மன்னிப்புக் கோரவேண்டு மென்பது சுமதியின் திரிகரண சுத்தியான-நேர்மை மிக்க ஆசையாகும். ஒருவரிக் கடிதம் எழுதி, வெறும் இருபத் தைந்து காசுச் செலவுடன் பிரச்னையை முடிவுகட்டிவிடுவ தென்பது நாகரிகமாகாதே?

சுமதி எடுத்துக் காட்டினுள்.

ஒஹோ! அப்படியா?” என்று சொல்லி, தம்ளரை எடுத்து வாய்வைத்துத் தண்ணிரைக் குடிக்கலானுள் அம்மா.

தான் எடுத்துச் சொன்ன காரணங்களை அம்மா ஆமோதித்தாளா அல்லது நிராகரித்தாளா என்பதைச் சுமதியால் புரிந்து கொள்ள முடியவில்லை. தண்ணிரை வாயில் ஊற்றிக்கொண்டு, எச்சில் பிளேட்டும் கையுமாக எழுந்தாள். தானும் குமாரும் சந்தித்ததையும் காதலித்த தையும் மனம் உறவாடிப் பழகி முடிவாகத் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென்ற முடிவிற்கு வந்ததையும் பின்னர்: இந்த விஷயத்தைச் சுசீலாவிடம் சமயம் பார்த்துச்சந்தர்ப்பம் கணித்து ஒர் அந்திப் பொழுதில் தயங்கியும் பயந்தும் தெரியப்படுத்தியதையும், அதற்குச் சுசீலா தன்னுடைய முடிவை விரைவாகத் தெரியப்படுத்துவதாகத் தெரிவித்த தையும், இறுதியில் சுசீலாவின் தீர்ப்பு வேறுவிதமாக அமைய