பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


அவள் எண்ணத் துணிந்தாள். மரணத் தருவாயில் சுசீ இட்ட அன்பின் கட்டளையைப் பற்றி அத்தானே என்ருவ தொரு நாளில் பிரஸ்தாபிக்க மாட்டாரா என்பதாகத் தான் அவள் கனவு கண்டாள். ஆனால், அவன்தான் வாய் மூடி மெளனி ஆகிவிட்டானே? ஆகவே, அதுபற்றித் தானே தான் அத்தானிடம் பேச்செடுக்க வேண்டுமென்று திட்ட மிட்டாள். அந்தப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது, எவ்வாறு கொண்டு செலுத்துவது என்பதெல்லாம் குழப்பமாகவே இருந்தது. எல்லாம் நடந்தாலும், அத்தான் என்ன முடிவு சொல்லுவார் என்ற விஷயம் புதிராகவே கண் பொத்தி ஆடிக் கொண்டிருந்தது. பயம் கலந்த கலவரத்தோடு அவள் கழித்த நாட்கள் எத்தனையோ? ஆஹார்-அத்தான் ஒரு நல்ல முடிவுக்கு வந்து விட்டார்! பிரச்சினை வெகு சுலபமாக முடிந்தது!...

வெறி நாய் ஒன்று நலியாமல் அவளைப் பின் தொடர்ந்து கடிக்க எத்தனித்தது.

சத்தம் கேட்டதோ, இல்லையோ, 'ஆ' என்று சத்தம் போட்டாள் சுமதி. -

அக்கம் பக்கத்தில் சிரிப்பொலி.

நாய் சேலை முன்ருனையைக் கவ்வத் தாவியது.

அவள் கொத்தாய் மணலை அள்ளி நாயின் கண்களை வசம் கணித்துத் தூவி வீசிள்ை.

நாய் ஓடியது.

சிரித்த அநாகரிகப் பிராணிகளை ஆத்திரம் தூள் பறக்க முறைத்துப் பார்த்துவிட்டு அவள் மடங்கினுள்; பகுத்தறி வற்ற நாய்க்கும் பகுத்தறிவு உள்ளதாகப் பெருமையடித்துக் கொள்ளும் மனிதர்களுக்கும் அதிகம் வித்தியாசம் இருப்பதாக அவளால் தீர்மானிக்க முடியவில்லை. மிஸ்டர் குமாருக்குத் தந்தி சாயங்காலம் கிடைச்சிடும். அத்தான் அனுப்பினதாகக் கொடுத்த தந்தியைக் கண்டடியும், என்ன