பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 í

நினைப்பாரோ? பல்வேறு தருணங்களில் நெருஞ்சிமுள்ளாகத் தைத்துக் கொண்டிருந்த சந்தேகம் ஒன்று இப்போது விசுவரூபம் எடுத்தது. கேதத்துக்கு-சாவுக்கு வந்த குமார் ஏன் எனக்கு ஒரு தபால்கூட எழுதவில்லை? கதை திசைமாறி விட்ட கதைதான் அவருக்கு தெரியாதே? ஒருவேளை, அவர் கடிதம் போட்டு, அது என் கைக்குக் கிடைக்காமல், கைமாறிப் போயிருக்குமோ? எப்படியாவது போகட்டும்;

நான்தான் வைராக்கியமாக அவருக்கு லெட்டரே போடாமல் இருந்திட்டேனே!...”

வீடு.

உள்ளே அமைதி நூதனமாக இருந்தது. குழவி அழவில்லை.

அம்மா கனக்கவில்லை.

அத்தான் இருமக் காணுேம். சுமதி முகப்பு நிலைப்படியில் கால் பதித்தாள், கருவண்டுக்

கண்கள் சுந்தரை மொய்க்கத் தொடங்கிவிட்டன.-- உரிமையுடன்.

'வந்திட்டியா, சுமதி' ஆவலாக வரவேற்புச் சொன்னவன் சுந்தர். *குமாருக்குத் தந்தி கொடுத்திட்டு வந்திட்டேனுங்க,' என்ருள் கன்னி இளமான்.

அவன் முகம் ஏன் அப்படிக் குழப்பத்தால் மாறத் தலைப் படுகிறது? -

மாறுதலுக்குரிய தத்துவரீதியான காரணத்தை அவளால் ஓரளவுக்கு ஊகம் செய்து கொள்ள முடியும் போலிருந்தது. எதையும் ஆறப்போட்டு வைக்க மாட்டார் அத்தான்; சூட்டோடு சூடாகக் கேட்டு விடுவார்.

'அப்படி உட்காரேன், சுமதி,' என்று கூடை நாற்காலியைச் சுட்டிக் காட்டினன் அவன். சுசீக்கு அதில்