பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


உட்காருவதென்ருல் ஒரு நிம்மதி கிடைத்து வந்ததே? வாயும் வயிறுமாக ஆனதற்கப்புறம்தான் அவளுக்கு இந்தக் கட்டில் சதம் ஆயிற்று.

கால் விரல்களில் பின்னியிருந்த ஷிபான் கரைை விலக்கி விடுவித்துக் கொண்டபடி, கொஞ்ச நேரம் ரெஸ்ட எடுத்துக்கிடுறதுதானே? அதற்குள் மத்தியானச் சாப்பாடு ரெடி ஆயிடும். முட்டை வாங்கி வந்தேன். ஆம்லெட் போடுகிறேன்; வெங்காயம் கம்மி பண்ணனும்; தெரியும்' என்ருள் சுமதி.

தேவதையைத் தரிசிக்கும் மனச் சிலிர்ப்பில் அவன் கட்டுண்டிருந்தான். நல்லபெண் அசல் சுசீதான்! கேள்வி கேட்கவோ, கருத்தை அறியவோ வேலை இருக்காது; அவளே முடிவை அறிவித்துவிடுவாள்!-சுசீலாவின் தங்கச்சிதானே?

அத்தான், ட்ரான்ஸிஸ்டர் எங்கே வச்சிருக்கீங்க?"

'நான் வைக்கல்லே-சுசீதான் வச்சிருந்தாள். எங்கே போய் அவள் கிட்டே கேட்க முடியும்??

சுமதியின் கவர்ச்சி கனிந்த கனி இதழ்கள் உணர்வுகளின் சங்கமத்தில் விளைந்த கொந்தளிப்பில் துடிக்கின்றன. அத்தானின் முகத்தில் சோகத்தின் சலனம் எதுவும் காணப் படவில்லை. அவளுக்கு வியப்புத்தான்!

“ஒருவேளை சின்ன கப்போர்டிலே பத்திரப்படுத்தி வச்சிருப்பாள்; சாவிக் கொத்து படத்துக்குப்பக்கமாயிருக்கிற ஆணியிலே மாட்டியிருக்கும்,' என்ருன் சுந்தர், 'சுமதி, ட்ரான்ஸிஸ்டர்னு உனக்கு அத்தனை ஈடுபாடா?’’

அவள் பதிலிறுத்தாள்; அப்படியெல்லாம் ஒண்னுமே கிடையாது; உங்களுக்கு ஒரு சேஞ்ச்" வேணும்; அதுக்காகத் தானுங்க, அத்தான்'

ஒஹோ' என்ருன் சுமதியின் அத்தான். அதுசரி, சுமதி; உன்னேடு சம்பந்தப்பட்ட குமார் விஷயமாகப் பேசத்தான் அவரை உடனே புறப்பட்டு வரும்படி தந்தி