பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


இளம் வெய்யிலும் இளங்காற்றும் இணைந்தும்பிணைந்தும் 'சரசசல்லாபம்' செய்து கொண்டிருந்த ஆனந்த வேளை அது.

"அத்தான், டிஃபன் ரெடி!"

மகாலட்சுமி மாதிரி தோன்றினாள் சுமதி. மஞ்சளும் மருக்கொழுந்தும் பொலிந்தன. குழற்கற்றையில் ஈரம் சொட்டியது. மனிதாபிமானத்தின் ஈரம்தான் அவ்வாறு தளும்பி வழிகிறது போலும்!

சுந்தருக்குத் தெரியும்!-எட்டுமணி என்றால், காலைப பலகாரம் வந்துவிடும். அப்புறம், கொஞ்சநாழி ராஜாவை எடுத்து வைத்துக்கொண்டு-அதாவது, சுசீலா பிறப்பித்த ஆணையின் படியும், இப்போது, சுசீயின் தங்கை சுமதியின் அன்பான வேண்டுகோளின் பிரகாரமும், ராஜாவை அலுங்காமல் குலுங்காமல் மடியில் கிடத்தி,அவன் புன்னகை புரியும் தேவதரிசனத்திற்கு வட்டியும் முதலுமாக முத்தங்களை வாரி வழங்க வேண்டும்; சுசீலா தன்னைப் பற்றின அமர நினைவுக்கு உயிர்ப்புள்ள முத்திரையாகப் பெண் குழந்தையைப் பெற்றுத் தந்திருந்தால், இப்போது எவ்வளவோ ஆறுதலாக இருந்திருக்குமேயென்று தவிப்பது; பின், சிறுபொழுது ஒய்வு அல்லது படித்தல்; தேவைப் பட்டால், ட்ரான்ஸிஸ்டர்! வந்து சேரும்; அப்பால், மதிய உணவு; அது முடிந்து, கோழித் தூக்கம்; காப்பி; இரவுச் சாப்பாடு; வெளிக்கூடத்தில் காற்றோட்டமாகத் தனியான உறக்கம்!-லீவு நாள் என்றால், சுமதியின் கண்டிப்பு இவ்வாறு அமையுமென்று எச்சரிகை செய்திருந்தாளே!

"சாப்பிடுங்க, உங்களுக்குப் பிடிச்ச ஆப்பம்; தேங்காய்ப் பாலை அளவாய் ஊத்திக்கணும், அதிலே போட்டிருக்கிற சர்க்கரை போதும்", என்று கூறி, தேங்காய்ப்பாலை அளவுடன் ஊற்றினாள் சுமதி.

அப்பத்தைச் சுவைத்து உண்டான் சுந்தர்; 'நப்பு'க் கொட்டினான். "சுசீ சுடுற ஆப்பத்தைப் பார்க்கிலும் இது ரொம்ப ரொம்ப 'நைஸ்'!" என்றான்.