பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


"அதெப்படீங்க, அத்தான்? இதெல்லாம் கசீ கத்துத் தந்த பாடம்தானுங்களே?”

"ஓஹோ! அப்படியா அப்படியானால், சரி!"

இருதரப்பிவிருந்தும் பொருள் பொதிந்த முறுவல் நயமாகவும் விநயமாகவும் பரிவர்த்தனை ஆயின.

காப்பி அருந்துகையில்,"குமாருக்குத் தந்தி கொடுத்து வாரம்ஒண்னு ஆகப்போகுது;விவரத்துக்கு ஒரு கார்டாச்சும் போடமாட்டாரோ? நம்மோட முடிவு அவருக்குத் தெரிஞ்சிருக்க வழி இருந்தாலாவது, ஏமாற்றத்தின் ஆத்திரத்திலே பதில் போடாமலோ அல்லது புறப்பட்டு வராமலோ இருக்கலாம்னு நாம் நினைக்கிறதுக்கு முகாந்தரம் உண்டு. ஆமா, இதுவரை உனக்குக்கூட குமார் லெட்டர் போடவில்லைதானே?" என்று வினவினான் அவன்.

"நான் போட்டிருந்தால், அவர் கட்டாயம் பதில் போட்டிருப்பார். என்கிட்டேயிருந்து ஆவலோடு லெட்டரை எதிர்பார்த்து ஏங்கிப்போயிருப்பார். இனிமேல் அவருக்கு நான் ஏன் கடிதம் எழுதவேணும்?"பேச்சில் இழைபின்னி யிருந்த நிர்த்தாட்சண்யம் குரலிலும் முறுக்கேறியிருந்தது. குமாரிடமிருந்து அவளுக்குக் கடிதம் ஏதும் வரவில்லை யென்று அன்னை சொல்லி விட்டாள்! - "ஒண்ணு தோணுதுங்க!" என்று பேச்சுக்கு 'சஸ்பென்ஸ்' வைத்தாள் சுமதி. "தஞ்சாவூரிலே பள்ளி அக்ரகாரத்திலே குமார் டீச்சருக்கு ஒரு சாமியார் சிநேகிதர் உண்டு; சித்த வைத்தியத்திலே பழம் தின்று கொட்டை போட்டவராம். அந்தக் கொட்டையிலேருந்து மாம்பழம் உண்டாக்கவும் செய்வாராம்; ஹிப்னாடிஸம், மந்திர தந்திரம்கூட அத்துபடியாம்! என்னவோ, அந்தச் சாமியார்கிட்ட இவருக்கு ஒரு ஈடுபாடு; மாதத்திலே பாதிராத்திரி ஆசிரமத்திலேதான் கழிப்பாராம்! என்னைக்கூட ரெண்டொரு வாட்டி அங்கே கூப்பிட்டார் குமார். ஆண்களுக்கு அந்த மாதிரியான அதீதமான சித்து விளையாட்டு எப்போதாகிலும் கைகொடுத்தாலும் கை