பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இப்போது அவளே கொள்ளை போய் விட்டாளே? வடுவில் கூட சீழ் வடியுமா, என்ன?

வைதேகி காத்திருந்த கதையுடன் சுமதி தோன்றினாள். பாட்டு அவளை நெகிழச் செய்திருக்கும். அதனால்தான், மூத்திரம் பெய்த டவல் தோணில் துலங்கிட, வந்துவிட்டாள் 'ட்ரான்ஸிஸ்டரு'டன்!

சுமதியை நினைக்க நினைக்க, அவனுக்கு அதிசயமும் ஆச்சரியமும் பொழுதுக்குப் பொழுது வளர்ந்து கொண்டிருக்கின்றன!-'இத்தனை லகுவிலே தன்னை மாற்றிக்கிட இந்தச் சுமதிப் பெண்ணால் எப்படி முடிஞ்சுது? கண்கள் பொடித்தன; உதடுகள் துடித்தன.

"அத்தான்!” என்று கலவரம் சூழ அழைத்தாள் சுமதி. "அக்காவை நினைச்சுக்கிட்டீங்களா?" விசாரிப்பு நடத்தினாள்.

"உன்னை நினைச்சுக்கிட்டேன்!”

பூஞ்சிட்டு, சிட்டாய் பறந்தது.

மறுமுறை ஒரு தனிமை; சூன்யத் தனிமை. தலையணையை வசம் பார்த்துப் போட்டுக் கொண்டு, கட்டிலில் சாய்ந்தான் அவன். சாசுவதமான புன்னகைக் கோலத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்த சுசீலாவை மீண்டும் நெஞ்சோடு நெஞ்சாகப் பார்த்துவிட்டு, அங்கே சிதறிய விழிநீரை அங்கேயே வழித்து வீசிவிட்டுத் திரும்பி வந்தான்; சாய்ந்து விட்டான். மூடின கண்களுக்குள்ளே எப்படி நுழைந்தாள் சுசீ?-சுசீ கெட்டிக்காரி-கூடு விட்டுக் கூடுபாய அவளுக்கா தெரியாது!

அம்மா இப்போதெல்லாம் அடிக்கடி காணாமற்போய் விடுகிறாள்!

அலட்டினாள் சுமதி.

தெய்வநாயகி அம்மாள் கையில் கடிதம் ஒன்று இருந்தது. "சுமதி, முன்னே நீ எழுதிவச்சிருந்த இந்த லெட்டரை உன்