பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ஏனென்றால், நான் ஆசைப்பட்டதை நீ இதுகாறும் தட்டியதே இல்லையே!

நீ பெற்றுப் பிழைக்க வேண்டுமென்று மாரியம்மன் கோயில் மாரியையும் எல்லையம்மன் கோயில் பிள்ளையாரையும் பெரியகோயில் பிரகதீஸ்வரரையும் ‘நேந்து’கொண்டேன்; என் பிரார்த்தனை பலித்து விட்டது. என்னுடைய இன்னொரு பிரார்த்தனையை என் கண் காணும் தெய்வமான நீ பலிக்கச்செய்து விட்டால், நான் ஆனந்தக் கடலாடுவேன்; நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்வோம்.

அக்கா, என் அன்பின் தெய்வமே!
நல்வாக்குக் கொடுப்பாயா?
உன் அன்புச் சகோதரி,
எஸ். சுமதி.”

சுமதி அந்தக் கடிதத்தை நான்கு மடிப்பாக மடித்தாள். ‘அக்கா, என் அன்பின் தெய்வமே! என் எதிர்காலம் உனக்குத் தெள்ளத் தெளியத் தெரிஞ்சிருக்கும். அதனாலேதான். கடைசிவரைக்கும் இந்த லெட்டரை உன்னோட பார்வைக்குக் கொண்டுவர முடியாமலே போயிடுச்சு! நீ இட்ட புது ஆணை எனக்குப் புது விதியாகி, புது உள்ளத்தையும் பக்குவப் படுத்தித் தந்திடுச்சு. நான் கொடுத்து வச்சவள்! என் அன்பான அத்தானை எடுத்துக்கப் போறேன்!’ நெஞ்சில் ஒடிய நினைவுகளே அவளது நெஞ்சத்தையும் தொட்டிருக்க வேண்டும் நிர்மலமான நீள் விழிகளைப் பான்மையுடன் நிமிர்த்தினாள். பெற்றவளிடம் உற்ற மரியாதையோடு கடிதத்தை நீட்டினாள். “அம்மா, இந்தக் கடிதத்துக்கும் எனக்கும் இருந்த சொந்தபந்தம்—உறவு உரிமையெல்லாம் காலாவதி ஆகி எத்தனையோ தினங்கள்—இல்லை, யுகங்கள் கழிஞ்சாச்சு! இந்த ஒரு முடிவை யூகிச்சோ, அல்லது உணர்ந்தோதான், நீ தெரிவிச்ச மாதிரி, மிஸ்டர் குமார்