பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. சியாங் கே-ஷேக் மானத்தைக் கேட்டுச் சியாங் மனம் கொதித்தார். உடனே வேகமாக மேஜையின் மேல் பாய்ந்து, அதிலிருந்த மணலே எட்டாகப் பி , 'ஜப்பானில் 5-கோடி ஜனங்கள் இருக்கிரு.ர்கள். ஓர் அங்குலத்தின் எட்டில் ஒரு பாகத்திலுள்ள 5-கோடிப் புழுக்களா அவர்கள் ' என்று அவம் உபாத்தியாயரிடம் கேட்டான். ஆசிரியருக்குத் தாக்கிவாசிப் போட்டது: புரட்சிக்காரணு, அப்பா? என்று கேட்டார். ர்ே சொன்ன உபமானம் பொருத்தமா யிருக்கிறதா என்றுதான் தெரிந்துகொள்ள விரும்பினேன். வேருெரு விஷயத்தைக் கிளப்பி, எடுத்துக்கொண்ட விஷயத்தை நீர் மழுப்பக் கூடாது ' என்று சியாங் பதிலுரைத்தார். படிப்பிலும் பயிற்சியிலும் அவர் ஒரு குறையும் இல்லாமல் கவனமா யிருந்தார். ஒரு வருஷத்திற் குள்ளாகவே, ஜப்பானுக்கு அனுப்பவேண்டிய மாணவர்களில் அவரும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்ருர், 1907-ஆம் u சியாங் ஜப்பானே அடைந்தார். அங்கே நாலரை வருஷம் தங்கி ராணுவப் பயிற்சி பெற்று வந்தார். முதலில் டோகியோவிலுள்ள ஷின்போ கோஇயோ என்ற ராணுவக்கலாசாலையில் ஆரம்பப் பயிற்சி பெற்று வந்தாா. சிறுவயது முதலே வீட்டில் வறுமையால் பல கஷ்டங்களே அநுபவித்தவர் எனினும், அவருக்கு ஜப்பானியரின் சிக்கனமும் எளிய வாழ்க்கையும் மிகவும் வியப்பாக இருந்தன. பள்ளிக் கூட்த்தில் கொடுக்கப்பட்ட உணவு அரை வயிற் றுக்குத்தான் காணும். ஆனல் ஜப்பானியர் மிகவும் குறைவாகவே சாப்பிடுவதை அவர் கண்டார். கொஞ்சம் சோறு, ஒரு மீன் துண்டு, கீரை-இவைகளே மட்டும் சாப்பிட்டு விட்டு அவர்கள் எந்த வேலையையும் சளேக்காமல் செய்து வந்தார்கள். உண்டி சுருங்கு தலைச் சியாங் அவர்களிடம் கற்றுக்கொண்டார்.