பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1928–1936 187 1928-க்குப் பின் சியாங் உள் காட்டு வேற்று மைகள் மறைய வேண்டும் என்றும், ஒரே தேசிய அரசாங்கத்தின் கீழ்த் தேசிய ஒற்றுமை கிலேபெற வேண்டும் என்றும் பல முறை கூறிவந்தார். அதே சமயத்தில் தம்முடைய படைகளே ஏவிக் கம்யூனிஸ்டு களுடன் போரிடச் செய்து அவரே அந்த ஒற்றுமை ஏற்படாமலிருக்கவும் செய்துவிட்டார். மாணவர்க ளுடைய தேசிய இயக்கம்கூட ஆங்காங்கே அடக்கப் பிட்டது. 1981-ல் சியாங் ஒரு சமயம் தம்முடைய எல்லா வேலைகளையும் ராஜிகாமா செய்துவிட்டுப் போய்விட்டார். பின்னல் மிகவும் சிரமப்பட்டு அவரை அழைத்துவர வேண்டியதாயிற்று. 1931, ஸெப்டம்பர் 18-ல் ஜப்பான் மஞ்சூரி யாவின்மேல் படையெடுத்தது. முதலில் இரண் டொரு சில்லறை விஷயங்களில் பரீட்சை பார்த்து விட்டு, அது வளம் பொருங்திய மஞ்சூரியா முழுவ தையுமே வளைத்துக்கொள்ள ஆரம்பித்தது. ஓரிரண்டு நாட்களிலேயே முக்கியமான நகரங்கள் எல்லாம் அதன் கைக்கு வங் துவிட்டன. நான்கிங் சர்க்கார் எதிர்ப்பதற்கு ஒன்றும் எற்பாடு செய்யாமல், சர்வ தேச சங்கத்திற்கு விண்ணப்பித்துக் கொண்டது. ஜப்பான எதிர்க்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த சாங் வியூ-லியாங்கை எதிர்க்க வேண்டாம் என்று உத்தரவிட்டுத் தடுத்து விட்டது. அவருடைய படைகளும் ஸ்தலத்தில் தயாராக இல்லே. ஆயினும் மஞ்சூரிய இளைஞர்கள் தொண்டர் கூட்டங் களாகச் சேர்ந்து, தங்களால் இயன்றமட்டிலும் ஜப்பானியப் படைகளைத் தாக்கிவந்தனர். மூன்று மாதங்களில் மஞ்சூரியா முழு தும் ஜப்பானுக்கு அடிமையாயிற்று. பிறகு 1982, ஜனவரி, 38-ல் ஜப்பானியப் படைகள் ஷாங்காய்க்கும் வந்து தாக்கின. அந் நகரிலிருந்த ஜப்பானிய மில்களில் உடனே வேலைநிறுத்தம் ஆரம்பமாயிற்று. சீனாவின்