பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சியாங் G5-Goఖఉ 19-வது படை அங்கிருந்தும், அது ஜப்பானியரை எதிர்க்க வேண்டாம் என்று சர்க்கார் ஆலோசனை சொல்லியிருந்தது. அப்படியிருந்தும் அக்தப் படை மூர்த்தண்யமாக எதிர்த்துப் போராடிற்று. ஜப்பான் வடிாங்காயைத் தாக்கி, அங்த நேரத்தில் மஞ்சூரி யாவில் தன் ஆதிக்கத்திற்கு அடங்கிய பஞ்சுகுவோ என்ற ஓர் அரசாங்கத்தை ஸ்தாபித்துவிட வேண்டும் என்றே எண்ணியிருந்தது. அது கிறை வேறியவுடன் ஷாங்காயிலிருந்து வாபஸாகிவிட்டது. 1983-ல் ஜப்பானியப் படைகள் ஜீஹோல் மாகாணத்தைப் பிடித்துக்கொண்டன. ஜீஹோல் மஞ்சுகுவோ வுடன் சேர்க்கப்பட்டது. அதன் பின் சீனுவுடன் ஒரு சமாதானம் செய்து கொள்ளப் பட்டது. அதன்படி பெய்ப்பிங்குக்கும் பேரிய மதிலுக்கும் இடையே இருந்த சீனப் படைகள் உள் காட்டுக்கு அழைக்கப்பட்டன. ஜப்பானுடைய முதல் ஆக்கிரமிப்பு வெற்றியாயிற்று. அது வாயில் ப்ோட்டுக் கொண்ட பிரதேசங்களே மென்று ஜீரணிப் பதற்கும் போதுமான கேரம் கிடைத்தது. யாதொரு காரணமும் இல்லாமல் ஜப்பான் சீனுவின் மேல் படையெடுத்ததைத் தடுக்க உலகில் ஒரு தேசமும் முன்வரவில்லை. சர்வதேச சங்கத்தின் விதிகளே ஜப்பர்ன் காற்றில் பறக்க விட்டு விட்டது. பிற நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அது அலட்சியம் செய்துவிட்டது. அதுமட் திெல்ல, ப்ெரிய யுத்தத்தை ஆரம்பிக்கவும் தயாராக இருந்தது. அமெரிக்கா அதன் வெற்றியை அங்கீகரிக்க மறுத்தது. இங்கிலாந்து அதைக்கூடச் செய்யவில்லே. சர்வ தேச சங்கம் எல்லா விஷயங்களை யும் ஆராய்ந்து பார்க்கும்படி ஒரு கமிஷனே அனுப்பி வைத்தது. ஸர் ஜான் ஸைமன் ஜினிவாவில் பத்திரிகை நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது,