பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சியாங் கே-வேடிக் வாக்கியங்கள், தேசத்தின் மாபெருங்தலைவர்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை, எல்லோருடைய உள்ளங் களிலும் இடம் பெற்றிருக்கின்றன. விஷயங்களைப் பாகுபடுத்தி ஆராய்ந்து பார்த்து, அறிவைப் பெருக்கி, அதன் மூலம் அங்தரங்க விசுவாசத்துடன் நல்ல நோக்கங்களே அமைத்துக் கொண்டு, உள்ளத்தை ஒழுங்குபடுத்தி, அதன் மூலம் உடலை ஒழுக்கமுடையதாக்கி, தன் குடும்பத்தை ஆண்டு, பிறகு காட்டை ஆட்சி செய்து, அதன் பின்பே ஒருவன் உலகத்திற்குச் சன்மார்க்கத்தைப் பிரசாரம் செய்ய முடியும் என்பதைப்பற்றி அவர் கூறியுள்ள விஷயங்கள் சேனபதி சியாங்கே-வேடிக்கின் ஆப்த வாக்கியங்களாக விளங்குகின்றன. சேனபதி பொதுக் கூட்டங்களிலும் கன்பூவுதியளின் வாக்கி யங்களே எடுத்துக் கூறுவது வழக்கமாயிருக்கிறது. கிறிஸ்தவ மதமும் சீனுவில் கொஞ்சம் பரவி யிருக்கிறது. கிறிஸ்து நாதர் சிலுவையேறிய பிறகு சிறிது காலத்திலேயே சீனுவுக்குள் அம்மதம் நுழைங் திருக்கிறது. சீனர்கள் அதைச்_சின் சியான' என்று கூறுகிருர்கள். இடைக்காலத்தில் கிறிஸ்தவ மதம் வளர்ச்சி யில்லாதிருந்தும், சென்ற சில நூற்ருண்டு களாக ஐரோப்பிய அமெரிக்க மிஷனரிகளின் முயற்சி யால் அது பெருகி வருகிறது. சீனக் குடியரசின் தந்தையான ஸன் யாட்-லென்னும், சேனபதி சியாங் கே-ஷேக்கும் கிறிஸ்தவர்கள் என்பதும் இங்குக் கவனிக்கத் தக்கது. கிறிஸ்தவ மதத்தைப் போல்வே இஸ்லாமும் ஆதியிலேயே சீனவில் பிரசாரம் செய்யப் பட்டிருக்கிறது. நவீன சரித்திரத்தில் சீன முஸ்லிம்கள் முக்கியமான ஸ்தானத்தை வகிப்பவர் களா யிருக்கிருர்கள். எத்தனையோ குருமார்களின் உபதேசங்களைச் சீனர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள். ஆயினும்