பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவின் புராதன நாகரிகம் 17 நம் ஞானிகளைப்போல், வாழ்வு மாயம் என்றும், இது மண்ணுவது திண்ணம் என்றும் வாழ்க்கையைத் தள்ளிவிட்டு அதற்கு அப்பாலுள்ள விஷயங்களேயே அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதில்லை. ஆத்மிக விஷயங்களின் சிகரங்களில் அவர்கள் எல்லே கடந்து ஏறுவதில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பது அவர்கள் சித்தாந்தம். இதல்ை வாழ்வை அவர்கள் இன்பமாகவே அநுபவித்திருக்கிருர்கள். வாழ்வு முழுவதும் பரலோகத்தையே எண்ணிக்கொண்டிருங் தால், இகலோகம் இருங்தும் இல்லாதுபோல் ஆகிவிடு கிறது. இவ்விஷயத்தில் சீனர்கள் புத்திசாலிகளாக இருங்திருக்கிருர்கள். ஆயினும் பழங்காலத்துப் பெரியவர்களுடைய உபதேசங்களுக்கு அளவுக்கு மிஞ்சிய ஒரு ஸ்தானத்தையே அவர்கள் அளித்து வருகிருர்கள் என்பதும் உண்மை. இதல்ை புதிய கருத்துக்களுக்கும் மாறுதல்களுக்கும் பெரிய தடை ஏற்படுகின்றது. மக்களின் வாழ்க்கையில் மாண்டு போன பழங்காலத்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தால், செத்தவர்களே இப்பொழுது வாழ்கிறவர்க ளாகவும், இருப்பவர்கள் இறந்தவர்களாகவும் மாறு கிருர்கள் என்று பிரெஞ்சு நாட்டு மேதாவியான அனடோல் பிரான்ஸ் என்பவர் கூறியிருக்கும் உண்மையையும் சீன மக்கள் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிருர்கள். m மத விஷயங்களிலும் ஒழுக்க முறைகளிலும் சீன வாலிபர்களும் பெண்களும் காலத்திற்கு ஏற்ற மாறுதல்களேச் செய்துகொண்டு வருகிருர்கள். பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுடைய எதிர்ப்பும் நாளடைவில் தகர்ந்து வருகிறது. கலா சாலைகளிலும் பள்ளிகளிலும் உள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் புதுக் கருத்துக்களே காடெங்கும் பரப்பி வருகிருர்கள். இதுவரை சீன சமூகம் உருக் குலேயாமல் இருந்து வந்ததற்கு ஒரு மூல காரணம் G,3