பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சியாங் கே-வேடிக் னியருடன் சண்டை போடுவதற்கு இந்தப் போர்ப் பயிற்சி மிகவும் உபயோகமாக இருந்தது. 1986-க்குப் பின் மறுபடி இரு கட்சிகளும் ஐக்கியப் பட்டுவிட்டன. இந்த ஐக்கியத்தைப் பற்றி புனர் விவாகம் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவது வழக்கம். இனியேனும் இவைகளுக்குள் விவாக ரத்து மறுபடி ஏற்படாமல் இருக்கவேண்டும். தேசத்தின் கிலேமையும், உலக கிலைமையும், இத்தனே வருஷங்களாகத் தோளோடு தோள் சேர்ந்து போராடியதில் ஏற்பட்ட நேசப்பான்மையும் மறுபடி பிளவுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும். இந்நூலில் கம்யூனிஸ்டுகளைப் பற்றி அதிகம் எழுதுவதற்கில்லை. ஆரம்பம் முதல் அந்தம் வரை கோமின்டாங் மகா சபையின் சரித்திரத்தையே நாம் கவனிக்கவேண்டி யிருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி 1921-ஆம் u 13 அங்கத்தினர்களுடன் ஸ்தாபிக்கப் பட்டது. இப்பொழுது அதில் 13-லட்சம் அங்கத் தினர் இருக்கின்றனர். சீனவின் வட பகுதியிலே பத்துக் கோடி மக்கள் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர். 8,60,000 சிப்பாய்கள் அந்த அரசாங்கத்தின் செஞ்சேனையில் சேர்ந்து உழைத்துவருகிருர்கள். மா க்ளே-துங் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக விளங்குகிரு.ர். இவர் ஹ-ன்ை மாகா ணத்தில் செல்வம் மிகுந்த குடியானவர் குடும்பத்தில் 1893-ம் u தோன்றியவர். இவர் அறிவில் சிறந்தவர். ஆதலால், கட்சியின் தத்துவங்கள் கொள்கைகள் எல்லாம் இவராலேயே விளக்கப் படுகின்றன. மிகுந்த அடக்கமும், ஆற்றலும், உறுதி யும் கொண்டிருப்பதால் இவரை லெனினோடு ஒப்பிடு வது வழக்கமாக இருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர்களில் இவரே முதன்மையானவர். உலகிற்