பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனவும் வல்லரசுகளும் 57. பொருள்களை உற்பத்திசெய்து குவித்து வந்ததோடு, பொருளாதாரத்தை உயர்ந்த கிலேயில் ஒழுங்கு படுத்தி, பெரும் மூலதனங்களைக் கொண்ட பாங்கிகளை ஏற்படுத்தி, ஏற்றுமதி இறக்குமதிகளைப் பல மடங்கு பெருக்கிக் கொண்டிருந்தது. அமெரிக்காவும் இங்கி லாங்தும் விற்பனைக்கு அனுப்பி வந்த சாமான்களைப் போலவே, ஜப்பானும் ஏராளமாய்த் தயாரித்து அனுப்பி வந்தது. மேலும் ஜப்பானின் சாமானகள மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இந்தியா, தென் அமெரிக்கா முதலிய பல் இடங்களிலும் ஜப்பானிய சாமான்கள் ஏராளமாக விற்கப்பட்டு வந்தன. ஐரோப்பிய நாடுகள் மகாயுத்தத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் பொழுதே, ஜப்பான் தன. பொருளாதார நிலையை உறுதியாகச் செம்மைப் படுத்திக்கொண்டு விட்டது. ஜப்பானில் பொது ஜனங்களுக்கு வாக்குரிமை மட்டும் இருந்தபோதிலும், அரசாங்கடேவடிக்கைகள் யாவும் பிரபுக்களின் மனம் போலவே கடந்து வரு கின்றன. அரசியல் முழுதுமே ஆளும் முதலாளி வர்க்கத்தின் கையில் இருக்கும்படி அமைந்திருக் கிறது. உதாரணமாக, யுத்த மந்திரிகளே கியமிப்ப தற்குச் சக்கரவர்த்தி ராணுவ தள கர்த்தர்களின் சம்மதம் பெற்றே நியமிக்கவேண்டும் என்று ஒர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி யுத்த வெறியர்களைத் தவிர வேறு யாரும் யுத்தி, மந்திரியாக வர முடியாதல்லவா ? ஆளும் வர்க்கத்திற்கும் ராணு வத்திற்கும் பிடிக்காத மந்திரிகள் எவரேனும் வாது விட்டால், அந்த மந்திரிகளை ஒழித்துவிடத்_தேசம் முழுதும் ரகசியச் சங்கங்கள் பரவி யிருக்கின்றன. மந்திரி டானகா என்பவர் ஜப்பான் பக்கத்து காடு களேப் பிடிக்கத் திட்டம் போட்டு ப் பிரசாரம் செய்ததால், 1980-இல் உடனே ஜப்பான் யுத்தத்தில்