பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சியாங் கே-வேடிக் பொழுது, தம்முடைய குடும்பத்தாருக்கு வைத்து விட்டுப் போகும் செல்வத்தைப்பற்றி ஒரு குறிப்பு எழுதிவைத்திருந்தார். இவருடைய சரீரத்தை அப் புறப்படுத்தும் பொழுது கசங்கிக் கிடங்த அங்கக் குறிப்பு:அகப்பட்டது. அதில் எழுதியிருந்த விஷயம் இதுதான் : ‘என்னுடைய மனேவியும் தோழியுமான சிங்-லிங் என் புத்தகங்களையும், பழைய துணி களையும், ஷாங்காயிலுள்ள வீட்டையும் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நான் சேர்த்து வைத்த அற்பமான இந்தப் பொருள் களே ஆஸ்தி என்று கூற முடியாது. இவைகளே என் ஞாபகார்த்தப் பொருள்களாகப் பெற்றுக் கொள்ளட்டும்.' - இத் தலைவருடைய புனிதமான தியாக வாழ்க் கைக்கு இதைவிடச் சிறந்த அத்தாட்சி வேறு வேண்டியதில்லை.

எலன் யாட்-லென் குவாங்டுங் மாகாணத்தில் சாய் ஹங் என்ற கிராமத்தில், 1866-ஆம் u நவம்பர்t 2வட பிறந்தவர். அவர் பிறந்த நாளேப் பற்றிக் கூடப் பின்னல் சந்தேகங்கள் வந்துவிட்டன. ஏனெனில், தம்முடைய புரட்சிக் காரியங்களுக்காக யாத்திரை செய்கையில், வேருேளிடத்தில் வேறு வருஷத்தில் பிறந்ததாக அவரே பதிவுசெய்ய நேர்ந்தது. சிறு வயது முதலே அவர் புரட்சிக்காரரா யிருந்தார். ஒரு சமயம் அவரும் அவருடைய நண்பன் ஹோ டுங் என்பவனும் பேசிக்கொண் டிருந்தார்கள். ஹோ டுங் அப்பொழுதுதான் ஒரு சீனப் பட்டாளத்தைப் பார்த்துவிட்டு வந்திருங்தான். சிப்பாய்களின் சாமர்த்தி யத்தை அவன் ஏளனம்செய்து, அத்தகைய சோதாக் கும்பலைச் சரியாகப் பயிற்சிபெற்ற ஆயுதம் தாங்கிய ஐம்பது வீரர் விரட்டியடித்து விடலாம் என்று